ஆப்கானிஸ்தானில் பதுங்கு குழிகள் அழிப்பு; 20 தலீபான் பயங்கரவாதிகள் சுட்டு கொலை
![]()
காபூல்,
ஆப்கானிஸ்தானில் கிழக்கு குணார் மாகாணத்தில் காஜி அபாத் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அந்நாட்டு ராணுவம் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது.
இதில், தலீபான் பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகளை விமானத்தில் சென்று தாக்கி அழித்தனர். இந்த தாக்குதலில் 20 தலீபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 8 பயங்கரவாதிகள் காயமடைந்தனர் என ராணுவ வட்டாரம் வெளியிட்டு உள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.
நாட்டின் எந்த பகுதியிலும் உள்ள தலீபான் பயங்கரவாதிகளை இலக்காக கொண்டு பாதுகாப்பு படையினரின் தாக்குதல்கள் தொடரும் என்றும் அந்த அறிக்கை தெரிவித்து உள்ளது.

