கடத்தல் லாரியை விரட்டிச்சென்ற போலீசார்
தேவகோட்டை ஜூலை 23
திருவேகம்பத்தூர் அருகே மணல் கடத்திய லாரியை திரைப்படக் காட்சிபோல் விரட்டிச் சென்ற போலீசார்.
குற்றவாளிகள் தப்பி ஓட்டம்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே திருவேகம்பத்தூர் – சருகணி நெடுஞ்சாலையில் லாரி ஒன்றில் மணல் கடத்திச் செல்லப்படுவதையும் மணல் கடத்தல் லாரிக்குப் பின்னால் பாதுகாப்புக்கு செல்வதைப்போல்
திமுக கொடிகட்டிய கார் ஒன்றும் செல்வதைக் கண்ட திருவேகம்பத்தூர் தலைமைக் காவலர் பெரோஸ்கான் தனது டூவீலரில் லாரியை விரட்டிச் சென்றுள்ளார்.
போலீசார் விரட்டி வருவதைக் கண்ட மணல் கடத்தல் லாரி ஓட்டுநர் லாரியை வேகத்தடைகளில்கூட நிதானிக்காமல் லாரியின் பின்பக்கக் கதவு திறந்து மணல் கொட்டும் அளவிற்கு அதிவிரைவாக லாரியை ஓட்டிச் சென்றுள்ளார்.
ஆனாலும் சளைக்காத காவலர் பெரோஸ்கான் லாரியை மடக்கி பிடிக்க விரைந்து சென்றுள்ளார்.
ஆனாலும் கடத்தல்காரர்கள் தப்பிச்சென்றுவிட்டனர்.
திரைப்படக் காட்சிகளில் வருவதுபோல் நடந்த இந்த சேசிங் காட்சியைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து திமுக கொடி கட்டிய கார் மூலமாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மணல் கடத்தலில் ஈடுபட்டது தேவகோட்டை அருகே புதுக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த விஜயன் என்பது தெரியவந்தது.
அவரை கைது செய்ய போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு,
முடியாமல் திணறி வருகின்றனர்.