Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் வியாழக்கிழமை ஜூலை 15, 2021

Loading

Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் வியாழக்கிழமை ஜூலை 15, 2021 சென்னை:

பிலவ வருடம் ஆனி 31 ஆம் தேதி ஜூலை 15,2021 வியாழக்கிழமை. பஞ்சமி திதி காலை 07.16 மணிவரை அதன் பின் சஷ்டி. உத்திரம் மறுநாள் பின்னிரவு 03.21 மணி வரை அதன் பின் ஹஸ்தம். சந்திரன் இன்றைய தினம் கன்னி ராசியில் பயணம் செய்கிறார். கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் ஆறாம் வீட்டிற்குச் செல்கிறார். கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத் தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் இழந்த உரிமையைபெறுவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

ரிஷபம்
சந்திரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் பாராட்டும்படி நடந்து கொள் வீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நினைத்தது நிறைவேறும்.
எந்த ராசிக்காரரை எந்த நோய் தாக்கும் – என்ன பரிகாரம் செய்யலாம்

மிதுனம் சுக ஸ்தானத்தில் சந்திரன் பயணம் செய்கிறார். எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள்.

கடகம்
மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் சந்திரன் பயணம் செய்கிறார். வேலை விசயமாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் திருப்தி உண்டாகும். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நினைத்த காரியம் நிறைவேறும்.

சிம்மம்
சந்திரன் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். கடந்த இரண்டு நாட் களாக கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வேலையில் கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பி தருவீர் கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் தலை மைக்கு நெருக்கமாவீர்கள்.

கன்னி
உங்கள் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் டென்சன் அதிகரிக்கும். திடீர் செலவுகள் வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகளால் சில சிக்கல்கள் ஏற்படும். மனதில் தெம்பும் தைரியமும் தேவைப்படும் நாள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. மன நிம்மதிக்காக ஆலய தரிசனம் செய்யலாம்.

துலாம்
சந்திரன் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். பழைய நினைவுகளை சந்தோஷமாக பேசி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை நீங்கும் உற்சாகம் கூடும். குருவின் பார்வையால் குதூகலம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மன தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாளாகும்.

விருச்சிகம் சந்திரன் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அதை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

தனுசு
சந்திரன் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்வதால் உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். தொழில் வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.

மகரம்
சந்திரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். குடும்பத்தில் கலகலப்பானசூழல் உருவாகும் உறவினர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்வீர்கள் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். வேலை செய்யுட் இடத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். தடைப்பட்ட வேலைகள் வெற்றிகரமாக முடியும்.

கும்பம்
சந்திரன் எட்டாம் வீட்டிற்கு வருகிறார். சந்திராஷ்டமம் தொடங்குவதால் மன உளைச் சல் ஏற்படும். முக்கியகோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.

மீனம்
சந்திரன் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் தேடி வரும். சகோதர வகையில் ஒற்றுமை அதிகரிக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும். தொழில் வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரியின் ஆதரவுக் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷமும் மன நிம்மதியும் உண்டாகும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *