Today’s Rasi Palan :இன்றைய ராசி பலன் புதன்கிழமை ஜூலை 07, 2021

Loading

Today’s Rasi Palan :இன்றைய ராசி பலன் புதன்கிழமை ஜூலை 07, 2021 சென்னை:

பிலவ வருடம் ஆனி 23 ஆம் தேதி ஜூலை 07,2021 புதன்கிழமை. திரயோதசி திதி இரவு 03.20 மணிவரை அதன் பின் சதுர்த்தசி திதி. ரோகிணி நட்சத்திரம் மாலை 06.18 மணி வரை அதன் பின் மிருகஷீரிடம். சந்திரன் இன்றைய தினம் ரிஷப ராசியில் பயணம் செய்கிறார். துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் இரண்டாம் வீட்டில் ராகு உடன் இணைந்து பயணம் செய்கிறார். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதையும் செய்வதற்கு முன் சிந்தித்து செய்வது நல்லது. இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் சின்ன சின்ன விவாதங்கள் வந்து போகும். திடீர் பயணங்கள் நன்மையில் முடியும். உறவினர்கள் உதவியுடன் நெருக்கடிகளை சமாளிப்பீர்கள்.

ரிஷபம்
சந்திரன் உங்கள் ராசியில் ராகு உடன் பயணம் செய்கிறார். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வங்கி சேமிப்பு உயரும். இன்று குடும்பத்தில் உறவினர் வருகையால் சந்தோஷம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் உதவி கிடைக்கும்.

மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பண வரவு வரும் கூடவே சுப செலவுகளும் எட்டிப்பார்க்கும். சிலருக்கு கௌரவ பதவிகள் தேடி வரும். இதுவரை எதிரியாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறும் சூழ்நிலை ஏற்படும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சர்வதேச முத்த தினம்: முத்தம் தர ஏற்ற இடம்… எந்த ராசிக்காரர்கள் எப்படி முத்தம் கொடுப்பதில் கில்லாடி

கடகம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் தேடி வரும். உயரதிகாரிகளின் உதவியால் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடி வரும். தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் ஓரளவு குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும்.

சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். வேலையில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வழியாக நல்ல செய்தி வரும். தொழில் ரீதியாக வெளிநாட்டு நபர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். சிலருக்கு புதிய வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

கன்னி
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வீண் செலவுகளை தவிர்ப்பதன் மூலம் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். காரிய வெற்றி உண்டாகும். வேலையில் கவனத்துடன் செயல்பட்டால் முன்னேற்றம் உண்டாகும்.

துலாம்
சந்திரன் இன்றைய தினம் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் வீண் பிரச்சினைகள் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுக்காமல் இருப்பது உத்தமம். இன்றைய தினம் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. பண முதலீடுகளைத் தவிர்க்கவும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. யாரையும் நம்ப வேண்டாம்.

விருச்சிகம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். சேமிப்பு உயரும்.

தனுசு
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் ராகு உடன் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பிள்ளைகளின் படிப்பு விசயமாக செலவு அதிகரிக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வியாபாரம் லாபகரமாக நடைபெறும்.

மகரம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். சிக்கனமாகவும் பொறுப்புடனும் செயல்பட்டால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பாக அலைச்சல், வீண் செலவுகள் உண்டாகலாம்.

கும்பம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு மன அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து நிம்மதி ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மீனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். வியாபார ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். ஆன்மீக பயணம் மன அமைதியைத் தரும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *