ஆக்கிரமிப்பு நிலங்களை திருத்தொண்டர் சபை நிறுவனர் தலைவர் ராதாகிருஷ்ணன் இன்று நேரில் பார்வையிட்டார்

Loading

பாப்பாரப்பட்டி மோரவள்ளி மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை திருத்தொண்டர் சபை நிறுவனர் தலைவர் ராதாகிருஷ்ணன் இன்று நேரில் பார்வையிட்டார் அப்பகுதி யில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பாலக்கோடு.ஜுன்.26-

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுக்கா பாப்பாரப்பட்டியில் உள்ள மோரவள்ளி மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை அந்த பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்துள்ளதாக திரு தொண்டர் சபை நிறுவனர் தலைவர் ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த நிலையில் இன்று சம்பந்தப்பட்ட மோரவள்ளி மாரியம்மன் கோவில் ஆக்கிரமிப்பு நிலத்தை ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார்.

இதையொட்டி பாப்பரப்பட்டி மற்றும் ஒகேனக்கல் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் மாரியம்மன் கோவில் அருகே 50 மேற்பட்ட போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது அதேபோல ஏ.பாப்பாரப்பட்டியில் உள்ள அபிஷ்ட வரதராஜர் பெருமாள் கோவில் ஆக்கிரமிப்பு நிலத்தையும் ஆதனூர் பஸ் ஸ்டாப் அருகே உள்ள போடி திம்மராயன் கோவில் ஆக்கிரமிப்பு நிலத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது பெண்ணாகரம் டிஎஸ்பி சௌந்தரராஜன். பென்னாகரம் தாசில்தார் பாலமுருகன். வருவாய் ஆய்வாளர் ஜெயலட்சுமி பாப்பரப்பட்டி இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் ஒகேனக்கல் இன்ஸ்பெக்டர் தண்டபாணி அறநிலையத்துறை செயல் அலுவலர் விமலா விஏஓ அண்ணாதுரை மற்றும் போலீசார் ஆகியோர் உடன் இருந்தனர்

0Shares

Leave a Reply