Today’s Rasi Palan; இன்றைய ராசி பலன் வெள்ளிக்கிழமை ஜூன் 25, 2021

Loading

Today’s Rasi Palan; இன்றைய ராசி பலன் வெள்ளிக்கிழமை ஜூன் 25, 2021 சென்னை:

பிலவ வருடம் ஆனி 11 ஆம் தேதி ஜூன் 25,2021 வெள்ளிக்கிழமை. பிரதமை திதி இரவு 08.59 மணிவரை அதன் பின் துவிதியை திதி. மூலம் காலை 06.40 மணிவரை அதன் பின் பூராடம் நட்சத்திரம் விடிகாலை 04.25 மணி வரை அதன் பின் உத்திராடம். சந்திரன் இன்றைய தினம் தனுசு ராசியில் பயணம் செய்கிறார். ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சந்திரன் பயணம் செய்வதால் ரொம்ப ராசியான நாள். நிதானம் தேவை. அப்பாவில் உடல் நலத்தில அக்கறை காட்டுங்கள். குருவின் பார்வை உங்க ராசிக்கு மூன்றாம் இடத்தின் மீது விழுவதால் உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். ஆனி மாதத்தில் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்

ரிஷபம்
சந்திரன் உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்வதால் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சற்று மந்த நிலை ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை. வியாபாரத்தில் புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

மிதுனம்
சந்திரன் உங்கள் ராசிக்கு ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். குடும்பத்தில் குதூகலமாக இருப்பீர்கள். இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்கடங்கி இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் தொழிலில் லாபம் அதிகரிக்கும். தம்பதியர் இடையே இருந்த சிக்கல்கள் நீங்கும்.

கடகம்
சந்திரன் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் மறைவதால் திடீர் மருத்துவ செலவுகள் வரலாம். எதிர்பார்த்த காரியம் எளிதில் நிறைவேறும். இன்றைக்கு மனஅமைதியும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையும் உண்டாகும். சகோதர சகோதரிகளால் நன்மைகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

சிம்மம்
சந்திரன் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால் பூர்வீக சொத்துக்களில் இருந்து வருமானம் கிடைக்கும். வெளியூர் பயணங்களைத் தவிர்க்கவும். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

கன்னி
சந்திரன் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் சஞ்சரிப்பதால் இன்று பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாகவே இருக்கும். செலவுகளை குறைத்து சிக்கனமாக செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நீண்ட நாள் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படும்.

துலாம்
சந்திரன் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்றைய தினம் கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்குவீர்கள். சுபகாரியங்கள் கைகூடி வரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

விருச்சிகம்
உங்கள் ராசியில் கேது பயணம் செய்கிறார். ராசிக்கு இரண்டாம் வீட்டில் சந்திரன் பயணம் செய்வதால் குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். திடீர் செலவுகளால் வங்கி சேமிப்பு கரையும். சிக்கனமுடன் இருப்பது நல்லது. வியாபாரம் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

தனுசு
உங்க ராசிக்குள் சந்திரன் பயணம் செய்கிறார். குடும்பத்தில் சுபசெய்திகள் தேடி வரும் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். பணத்தையும் விலை உயர்ந்த பொருட்களையும் பத்திரப்படுத்தவும். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்வீர்கள்.

மகரம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வரவுகேற்ற செலவுகள் வரும். திடீர் செலவுகள் கூடும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உறவினர்களால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

கும்பம்
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சந்திரன் பயணம் செய்வதால் இன்று உங்களுக்கு மன அமைதி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நிறைவேறும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும். நிதி நெருக்கடிகள் நீங்கும் வங்கி சேமிப்பு அதிகரிக்கும்.

மீனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். வேலை செய்யும் இடத்தில் உடன் பணிபுரிபவர்கள் மூலம் அனுகூலப்பலன் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பாக பேச நல்ல நாள். வெற்றிகள் தேடி வரும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *