தமிழக அரசின் இ – பதிவு இணையதளம் முடக்கம் இன்று மாலைக்குள் சரி செய்யப்படும்*
*தமிழக அரசின் இ – பதிவு இணையதளம் முடக்கம் இன்று மாலைக்குள் சரி செய்யப்படும்*
*ஊழல் குற்றச்சாட்டால் நிறுத்தப்பட்டுள்ள பாரத் நெட் திட்டத்தில் வெளிப்படையாக டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெறும்*
*தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி*
தமிழக அரசின் இப்பதிவு இணையதளத்தை 60 லட்சம் பேர் ஒரே நேரத்தில் அணுகியதால் முடங்கியுள்ளது இன்று மாலைக்குள் கீழ் பதிவு இணையதளம் சரி செய்யப்படும் என தெரிவித்தார்
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்
கொரோணா காலத்திலும் தொற்று பரவலை தடுக்கவும், உயிரிழப்புகளை குறைக்கவும் தமிழக முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்
வழக்கமாக தமிழக அரசின் இப்பதிவு இணையதளத்தை 6 லட்சம் பேர் வரை வந்து செல்லக்கூடிய வகையில் செயல்பட்டு வருவதாகவும் இந்த நிலையில் இன்று முதல் தரவுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் 60 லட்சத்திற்கும் அதிகமானோர் ஒரே நேரத்தில் தமிழக அரசின் இப்பதிவு இணைய தளத்தை அணுகியதால் இணையதளம் முடங்கி இருப்பதாகவும் அதனை சரி செய்யக்கூடிய பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் இன்று மாலைக்குள் இணையதளம் சரி செய்யப்படும் என தெரிவித்தார்
தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவை என்று இ – பதிவு இணையதளத்தை பயன்படுத்தி வெளியே வர முயற்சிக்க கூடாது என வேண்டுகோள் விடுத்தார்
இப்பதிவு இணையதளத்தில் போலியான ஆவணங்கள் மூலம் அனுமதி பெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்
ஒடிடி இணையதள தொடர்களில் தமிழர்களுக்கு எதிரான தொடர்களை ரத்து செய்ய மத்திய அரசுக்கு தமிழக அரசின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு அதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்
கடந்த ஆட்சியில் ஊழல் புகார் காரணமாக ரத்து செய்யப்பட்ட கிராமங்களுக்கு இணையதளம் கொண்டு செல்லக்கூடிய திட்டமான பாரத் நெட் திட்டம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் அவற்றை விரைவில் தமிழக அரசின் சார்பில் வாதாடி வெளிப்படையாக டெண்டர் விடப்பட்டு அனைத்து கிராமங்களுக்கும் இணையதள வசதி கிடைக்க கூடிய வகையில் தமிழக அரசு செயல்படும் என நம்பிக்கை தெரிவித்தார்
மனோ தங்கராஜ்
அமைச்சர் தொழில்நுட்பத் துறை