Today’s Rasi Palan: இன்றைய ராசி பலன்

Loading

Today’s Rasi Palan: இன்றைய ராசி பலன் செவ்வாய்க்கிழமை ஏப்ரல் 27, 2021

சென்னை: பிலவ வருடம் சித்திரை 14 ஆம் தேதி ஏப்ரல் 27, 2021 செவ்வாய்க்கிழமை. பௌர்ணமி திதி காலை 09.01 மணி வரை அதன் பின் பிரதமை. சுவாதி இரவு 08.08 மணி வரை அதன் பின் விசாகம். சந்திரன் இன்றைய தினம் துலாம் ராசியில் பயணம் செய்கிறார். மீன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் இன்றைய தினம் ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். சந்திரன் சஞ்சாரத்தினால் மனதில் உற்சாகம் பிறக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் எதிரிகளின் தொல்லைகள் குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். வேலையில் புது உற்சாகத்துடன் செயல்படுவார்கள். பிள்ளைகள் பெற்றோரின் நன்மதிப்பை பெறுவார்கள்.

ரிஷபம்
சந்திரன் இன்றைய தினம் ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பண வரவு அதிகரிக்கும். பேச்சில் உற்சாகம் பிறக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். வம்பு வழக்கு போன்ற விஷயங்களில் சாதகமான பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மிதுனம்
மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். மனதில் சுறுசுறுப்பும் உற்சாகமும் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். இன்று தொழில் ரீதியான வெளியூர் பயணங்களில் வெற்றி உண்டாகும். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

கடகம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் வேலைபளு அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்களிடம் மாற்று கருத்துக்கள் தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் சாதகமான பலன் உண்டாகும். ஆலய வழிபாடு மன அமைதியைத் தரும்.

சிம்மம்
சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்றைய தினம் நீங்கள் செய்யும் வேலைகளுக்கு முயற்சி கிடைக்கும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்

இன்று குடும்பத்தில் பெண்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். உறவினர்களின் வருகையால் சந்தோஷம் கூடும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

கன்னி
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். பயணங்களால் நன்மை உண்டாகும் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். இன்று பிள்ளைகளால் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். வேலை செய்யும் இடத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நண்பர்களால் நன்மை உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பயணங்களால் நன்மைகள் உண்டாகும்.

துலாம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசியில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் வழியாக நல்லது நடக்கும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் வெளிவட்டார நட்பு ஏற்படும். உடல்நிலை நன்றாக இருக்கும். உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறும். சுபகாரியங்கள் கைகூடி வரும்.

விருச்சிகம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். நினைத்த காரியம் கைகூடி வரும்.

இன்று எடுக்கும் காரியங்களை முடிப்பதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகள் குறையும். சுபகாரிய முயற்சிகளில் சிறு தாமதத்திற்கு பின் அனுகூலப் பலன் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

தனுசு
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் திடீர் தனவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். வரவேண்டிய தொகை எதிர்பாராத வகையில் கிடைக்கும். கூட்டாளிகளின் ஆலோசனையால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும்.

மகரம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உடன்பிறந்தவர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உற்சாகமாக இருப்பீர்கள். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள்.

கும்பம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் உண்டாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் சோர்வு ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும் வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள்.

மீனம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் தடை தாமதங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பணம் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது உத்தமம். வேலை செய்யும் இடத்தில் கவனம் தேவை. பெரிய அளவில் முதலீடுகளைத் தவிர்க்கவும். பேச்சில் நிதானம் தேவை. இரவு நேர பயணங்களைத் தவிர்த்து விடவும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *