பம்மல் நாகல்கேணி பகுதியிலுள்ள பி.கே.எஸ் மீன் மார்க்கெட்டில் சர்வதேச உரிமைகள் கழகம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு

Loading

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது இந்தநிலையில் பல கட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது

இரவு நேரங்களில் ஊரடங்கு உத்தரவு தமிழக அரசு பிறப்பித்துள்ளது அதுமட்டுமின்றி ஞாயிறு அன்று முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் மீன் வாங்க மீன் மார்க்கெட்டில் குவிவார்கள் ஞாயிறு அன்று விடுமுறை என்பதால் சனிக்கிழமையான இன்று சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் நாகல்கேணி பகுதியில் பி.கே‌.எஸ் மீன் மார்க்கெட்டில் அதிகமான மக்கள் வருவார்கள் என்பதற்காக சர்வதேச உரிமைகள் கழகம் சார்பில் மாநிலத் துணைத் தலைவர் டி.ஆர்.கே தாமரைச்செல்வன் அவர்கள் மீன் வாங்க வரும் அனைவருக்கும் மற்றும் வியாபாரிகளுக்கும் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி முக கவசம் இல்லாமல் இருக்கும் அனைவருக்கும் முக கவசம் வழங்கியும், கபசுர குடிநீர் கொடுத்தும் மீன்களை வாங்கி கொண்டு பாதுகாப்பாக செல்லும்படி அறிவுரை வழங்கினார் மற்றும் இதில் கே.முனுசாமி, பி.அம்சா வேலு டி.ஜெயபால் ஆகியோர் பொது மக்களுக்கு சமூக இடைவெளி கடைப்பிடித்து செல்லுமாறும் மற்றும் கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

0Shares

Leave a Reply