Today’s Rasi Palan: இன்றைய ராசி பலன்

Loading

Today’s Rasi Palan: இன்றைய ராசி பலன் செவ்வாய்கிழமை ஏப்ரல் 20, 2021

சென்னை: பிலவ வருடம் சித்திரை 07ஆம் தேதி ஏப்ரல் 20, 2021 செவ்வாய்கிழமை. அஷ்டமி திதி இரவு 12.44 மணி வரை அதன் பின் நவமி. புனர்பூசம் காலை 06.52 மணி வரை அதன் பின் பூசம். மங்களகரமான செவ்வாய்க்கிழமை செவ்வாய்பகவானின் ஆசி நிறைந்த இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் இன்றைய தினம் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பயணங்களால் வெற்றி உண்டாகும். சோர்வும் மந்தநிலையும் நீங்கி உடலில் சுறுசுறுப்பு ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கலில் லாபம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் லாபம் கிடைக்கும்.

ரிஷபம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு மூன்றாவது வீடான முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு காரணமாக உடல் அசதி சோர்வு உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். திருமண முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வராத கடன்கள் வசூலாகும்.

மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கின்றனர். இன்று குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். சொந்த தொழில் புரிபவர்களுக்கு வெளியூர் வெளிநாட்டு தொடர்பு கிட்டும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியங்கள் கைகூடும்.

கடகம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்குள் பயணம் செய்கிறார். இன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் ஏற்படும். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும், எடுக்கும் புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அதிகரிக்கும். பணப்பிரச்சினைகள் குறையும்.

சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி தேடி வரும். உறவினர்கள் வருகையால் உற்சாகம் அதிகரிக்கும். பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நற்பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களுடன் நட்பு ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும்.

கன்னி
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகி முன்னேற்றம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை விசயமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு உண்டு. நண்பர்களின் மூலமாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் விற்பனையில் லாபம் ஏற்படும்.

துலாம்
துலாம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை வராத பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பெண்களுக்கு மகிழ்ச்சிகரமான நாள். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். வங்கி சேமிப்பு உயரும்.

விருச்சிகம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார்.

இன்று குடும்பத்தில் உற்றார் உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஆதரவு கிட்டும். ஆலய வழிபாடு மன அமைதியைத் தரும்.

தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும்.

தனுசு
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். அஷ்டம ஸ்தானத்தில் உள்ள சந்திரனால் இன்று எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது சிறப்பு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடனும் நிதானத்துடனும் செல்வது நல்லது. பேச்சில் நிதானம் தேவை.

மகரம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்வீர்கள். ஆடம்பர பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். சிறு ஆன்மீக பயணம் மன அமைதியைத் தரும்.

கும்பம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். சிலருக்கு புத்திர வழியில் அனுகூலம் உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பழைய கடன்கள் வசூலாகும். பொருளாதார நெருக்கடிகள் நீங்கும்.

மீனம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கின்றனர். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் பிள்ளைகள் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. இன்று உடல்நிலையில் வயிறு சம்மந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளால் பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய நபர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. அலுவலகத்தில் உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *