சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று தேர்தல் பாதுகாப்பு பணிகள் மற்றும் வாக்குப்பதிவினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சென்னையில் உள்ள
வாக்குச்சாவடிகளுக்கு சென்று தேர்தல் பாதுகாப்பு பணிகள் மற்றும்
வாக்குப்பதிவினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தல்-2021
நடைபெறுவதையொட்டி சென்னை பெருநகர காவல் அதிகாரிகள், ஆளிநர்கள்,
மத்திய துணை ராணுவ படையினர், ஊர்காவல் படையினர், ஓய்வு பெற்ற
காவல்துறையினர் மற்றும் ராணுவ வீரர்கள், சென்னை பெருநகரிலுள்ள
வாக்குச்சாவடிகளில் தகுந்த பாதுகாப்பு பணிகளுக்காக அலுவல் நியமிக்கப்பட்டு
பணியில் இருந்து வருகின்றனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால்
அவர்கள் (06.4.2021) சென்னை, கீழ்பாக்கம், பூந்தமல்லி
நெடுஞ்சாலையிலுள்ள புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் உயர்நிலை பள்ளி,
மயிலாப்பூர் உருது ஆண்கள் தொடக்கப்பள்ளி, இராயப்பேட்டை இந்திய
அலுவலர்கள் சங்க வளாகம், மயிலாப்பூர் சாந்தோம் உயர்நிலை பள்ளி, ராஜா
அண்ணாமலைபுரம் ராணி மெய்யம்மை பெண்கள் உயர்நிலை பள்ளி ஆகிய
இடங்களில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று பாதுகாப்பு
ஏற்பாடுகளை ஆய்வு மேற்கொண்டு சரக அதிகாரிகளுக்கு தகுந்த
ஆலோசனைகளை வழங்கியும் பணியில் தளராது பணி செய்துவரும் மேற்கண்ட
காவல் மற்றும் இதர ஆளிநர்களுக்கு பிஸ்கட், குடிநீர் பாட்டில்கள்
வழங்கினார்கள்.
மேலும், வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் எவ்வித இடையூறும்
இல்லாமல், வரிசையில் நின்று வாக்களிக்க போதிய ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளது குறித்து ஆய்வு செய்தார்.
மேலும் சரக அதிகாரிகள் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்
குறித்தும், தேர்தல் பணி செய்து வரும் காவல் அதிகாரிகள், ஆளினர்களின்
நலனை கருத்தில் கொண்டு உரிய வசதிகள் செய்திடவும் அறிவுரை வழங்கினார்.