தனது தந்தை விட்டுச்சென்ற பணிகளை தொடர தனக்கு வாய்ப்பு தாருங்கள்… காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் தீவிர வாக்கு சேகரிப்பு.
![]()
கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தல் மற்றும் தமிழக சட்டசபை தேர்தல் இணைந்து வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் நிலையில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர்.விஜய் வசந்த் தனது பிரச்சாரத்தை நேற்று நாகர்கோவில் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் முன்பு தொடங்கினார்.அவருடன் மதசார்பற்ற கூட்டணி கட்சி கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர்.ஆஸ்டின் அவர்களும் திறந்த வாகனத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அப்போது தனது தந்தை மறைந்த எச். வசந்தகுமார் விட்டுச்சென்ற பணிகளை தொடர தனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு குமரிமாவட்டம்- சுசீந்திரம், நல்லூர், மருங்கூர் போன்ற பகுதிகளில் இருசக்கர வாகன அணிவகுப்புடன் பொதுமக்களிடம் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்..
