கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் ரஜினி மக்கள் மன்றத்தினர் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஆதரவு !…..
கன்னியாகுமரி : தமிழ்நாட்டின் முக்கியமான சட்டமன்றத் தொகுதி விஐபிகள் போட்டியிடும் தொகுதிகள் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி ,ஐஜேகே கூட்டணியின் சார்பாக கலப்பை மக்கள் இயக்கத்தின் நிறுவனர் பிரபல திரைப்பட இயக்குனர் பி.டி. செல்வகுமார் போட்டியிடுகிறார்.அவரை மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் திரைப்பட நடிகர் கமலஹாசன் தேர்வு செய்து அவர் மனு தாக்கல் செய்ததில் இருந்து பல்வேறு தரப்பினரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நேற்று குமரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற இணைச் செயலாளர் ஆர். எஸ் .ராஜன் தலைமையில் ரஜினி மக்கள் மன்றத்தினர் அவருக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தது கன்னியாகுமரி தொகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. ஆர் எஸ் ராஜன் பத்திரிகையாளர்களிடம் பேசும்பொழுது ‘கலப்பை மக்கள் இயக்கத்தின் நிறுவனர் பி.டி செல்வகுமார் அவர்கள் கொரானா காலகட்டத்தில் 150 நாட்களாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி மற்றும் உணவு பொருட்கள் வழங்குதல், ஏழைகளுக்கு கல்வி மற்றும் திருமண உதவித்தொகை வழங்குதல், மற்றும் பிரசித்தி பெற்ற குபேரன் மலை மூலிகை தியான மண்டபம், மலைக்குகைமாதா தோமையார் ஆலயம் என அவருடைய பல்வேறு நலத்திட்டங்கள் எந்த மாநிலத்திலும் யாரும் தனி நபராக இருந்து செய்ய முடியாத மிகப்பெரிய விஷயங்கள் ! ஜேம்ஸ்டவுன் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டி கொடுத்தல் , அழகப்பபுரத்தில் நூலகம் கட்டிக் கொடுத்தது, அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் 1008 பெண்களை வைத்து சமத்துவ பொங்கல் நடத்தியது. மேலும் அன்னம்மாள் கல்லூரியில் கணிப்பொறி வழங்கியது விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் மற்றும் ஆட்டுக்குட்டிகள் வழங்கியது என எண்ணற்ற நலத்திட்டங்களை அவர் தன்னுடைய சொந்த செலவில் செய்து இருக்கிறார். இது போன்ற நல்ல மனிதர்கள் தான் கண்டிப்பாக அரசியலுக்கு தேவை எனவும், இது எங்கள் ரஜினி மக்கள் மன்றத்தின ரை மிகவும் கவர்ந்தது அவர் கன்னியாகுமாரி சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டால் மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை கண்டிப்பாக தருவார் என்பது உறுதி எனவே கன்னியாகுமாரி சட்டமன்ற தொகுதியில் ரஜினி மக்கள் மன்றத்தின் அனைவரும் அவருக்காக பிரச்சாரம் செய்து அவருக்கு வெற்றி வாய்ப்பை வழங்க உள்ளோம் என்று கூறினார்.உடன் கன்னியாகுமரி சட்டமன்ற வேட்பாளர் பி.டி.செல்வகுமார், மக்கள் நீதி மய்ய பொறுப்பாளர் ஜான்சன் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர்.