விவசாயிகளுக்கான கண்டுணர்வு சுற்றுலா:
நீலகிரி மாவட்டம் குன்னூர் வட்டாரம் தோட்டகலை மற்றும் மலைபயிர்கள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் விரிவாக்க சீரமைப்பு திட்டம் 2020-21 வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின்( அட்மா)மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு வகையன பயிற்சிகள் செயல் விளக்கங்கள் கண்டுணர்வு சுற்றுலாக்கள் மூலம் புதிய தொழில் நுட்பங்களை விவசாயிகள் கற்றுக்கொண்டு பயன்பெறும் வகையில் நடைபெற்றது.கடந்த 05-02-2021 அன்று உள் மாவட்ட அளவிலான கண்டுணர்வு சுற்றுலாவானது பழத்தோட்டத்தில் உள்ள சின்னையன் அவர்களது ஒருங்கிணைந்த அங்கக வேளாண் பண்ணையில் நடைபெற்றது. மேற்கண்ட நிகழ்ச்சியானது திருமதி.எஸ்.ஷிபிலாமேரி தோட்டகலை துணை இயக்குநர் உதகை அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மேற்கண்ட சுற்றுலாவை குறித்து துணை இயக்குநர் அவர்கள் கூறுகையில் தற்போது நடைமுறையில் உள்ள சாகுபடி முறையில் உற்பத்தி செய்யும் சாகுபடி பயிர்களில் இரசாயண உரங்கள் பற்றியும் பூச்சி கொல்லி மருந்துகள் நச்சு தன்மை அதிகரித்து காணப்படுவதால் அனேக பாதிப்புகள் மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் ஏற்படுகிறது.இந்த சூழ்நிலையில் அங்கக வேளாண்மை அவசியமாகிறது.
பயிற்சியளரான முன்னோடி விவசாயி திரு.ஆர்.சின்னப்பன் அவர்கள் தமது பண்ணையில் காய்கறி பயிர்கள் முற்றிலும் அங்கக முறையில் உற்பத்தி செய்து வருகின்றனர்.மேலும் ஒருங்கிணைந்த பண்ணை முறையில் ஆடு வளர்ப்பு, முயல்
வளர்ப்பு, நாட்டுமாடு, மீன்வளர்ப்பு உரக்கூடம் அமைத்து சாகுபடி செய்து வருகிறார்.
மேற்கண்ட கண்டுணர்வு கண்டுணர் சுற்றுலா விரிவாக்க சீரமைப்பு திட்டத்தினை திரு.ராக்கேஷ் வட்டார. தொழில் நுட்ப மேலாளர் மற்றும் திரு.ஜான் பாஸ்கோ உதவி தொழில் நுட்ப மேலாளர் சிறந்த முறையில் எற்பாடு செய்து நன்றியுரை வழங்கினார்கள். இதில் ஒதனட்டி கிராமத்தினை சார்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள்