மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணியில் சேருவதற்கான போட்டித் தேர்வு பயிற்சி : கலெக்டர் தகவல் :
திருவள்ளுர் பிப் 17 : மீன்வளம், நிதி, பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்த அமைச்சர் 11.07.2017 அன்று சட்ட பேரவையில் அறிவித்ததன்படி மீன்வளத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்திய குடிமைப்பணிக்கான போட்டித் தேர்வில் கலந்துக்கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் ஆணை வழங்கப்பட்டது.
கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை மீன்வளத்துறையின் இணையதளமான www.fisheries.tn.gov.in லிருந்து கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்பபடிவங்களை திருவள்ளுர் (இருப்பு) பொன்னேரி மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பதாரர் மீன்துறை இணைய தளத்தில் உள்ள விரிவான அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகம், எண்.05, பாலாஜி தெரு, சங்கர் நகர், வேண்பாக்கம், பொன்னேரி -601 204. (அலுவலக தொலைபேசி எண்.044 27972457) என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ அல்லது நேடியாகவோ 19.02.2021 பிற்பகல் 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.
=================================================================================