விவசாய கடன் தள்ளுபடியில் மோசடி! சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் பாபநாசத்தில் தமிழ்நாடுவிவசாயிகள் சங்க மாநில ஒருங்கிணைப்புக்குழு பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் பேச்சு!!!
திருமண்டங்குடி சர்க்கரை ஆலை மற்றும் அம்பிகா சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்க வலியுறுத்தியும், கரும்பு விவசாயிகள் மீது சட்ட விரோதமாக கடன் பெற்று மோசடி செய்த திருமண்டங்குடி சர்க்கரை ஆலை மற்றும் அம்பிகா சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்தும், பாநாசத்தில் விவசாய சங்கங்கள்,மற்றும் அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் ரவீந்திரன் தலைமை வகித்தார். தஞ்சை மாவட்ட கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார். இதில் திமுக மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், திருவிடைமருதூர் எம்.எல்.ஏ. கோவி.செழியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் பாரதி, காங்கிரஸ் கட்சி மாவட்ட செயலாளர் லோகநாதன். தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் ரஹ்மத் அலி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில பொறுப்பாளர் விவேகானந்தன், தமிழ்நாடு முஸ்லீம் லீக் மாநில செயலாளர் ஷாஜஹான், மறுமலர்ச்சி திமுக மாவட்ட செயலாளர் இரா.முருகன், ஆகியோர் கலந்து கொண்டு ஆரூரான் சர்க்கரை ஆலை மற்றும் அம்பிகா சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய சுமார் 112 கோடி நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும், கரும்பு விவசாயிகள் பெயரில் விவசாயிகளுக்கே தெரியாமல் பல கோடி ரூபாய் மோசடியாக கடன் பெற்ற ஆலை அதிபர் மீது நடவடிக்கை வலியுறுத்தியும், கண்டன உரை நிகழ்த்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாக தமிழ்நாடு விவசாய சங்கங்கங்களின் ஒருங்கிணைப்புகுழு பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன் பேசும் போது விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும், விவசாயிகள் மீது மோசடியாக கரும்பாலைகள் பெற்றுள்ள கடனுக்கு மாநில அரசு பொறுப்பேற்று கடன் தொகை அனைத்தையும் அரசே வங்கிக்கு செலுத்தி நேர் செய்ய வேண்டும், தற்போது மூடப்பட்டுள்ள திருமண்டங்குடி மற்றும் அம்பிகா சர்க்கரை ஆலைகளை தமிழக அரசே எடுத்து நடத்த வேண்டும் விவசாய கடன் தள்ளுபடி செய்ததில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், சிபிஜ விசாரணை நடத்த வேண்டும் என பேசினார். ஆர்ப்பாட்டத்தில் திமுக ஒன்றிய பெருந்தலைவர்கள் கலைச்செல்வன், சுமதி கண்ணதாசன், உள்பட திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, முஸ்லீம் லீக், மதிமுக, தமுமுக உள்பட அனைத்து கட்சி நிர்வாகிகள், விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இறுதியில் விவசாய சங்க மாவட்ட துணை செயலர் சாமு தர்மராஜ் நன்றி கூறினார்.