ரூ 28. கோடி 70 லட்சம் மதிப்பில் புதிய தடுப்பனை கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கியது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதி நெல்லிக்குப்பம் அடுத்த விஸ்வநாதபுரத்தில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பனை கட்ட வேண்டும். என சத்யா பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ. விடம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து ரூ 28. கோடி 70 லட்சம் மதிப்பில் புதிய தடுப்பனை கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கியது. இதைத் தொடர்ந்து புதிய தடுப்பாணை கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி விஸ்வநாதபுரத்தில் நடை பெற்றது. இதற்கு சத்யா பன்னீர் செல்வம் எம். எல. ஏ. தலைமை தாங்கி. அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். பொதுப்பணித் துறை நீர்வள ஆதார துறை கண்காணிப்பு பொறியாளர் ஹரி மனோகர். செயற் பொறியாளர் மணிமோகன். அண்ணா கிராமம் ஒன்றிய குழ தலைவர் ஜானகிராமன். ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நெல்லிக்குப்பம் அதிமுக நகர செயலாளரும்.கூட்டுறவு சங்க தலைவருமான சவுந்தர் வரவேற்றார். நிகழ்ச்சில் ஒன்றிய அவைத் தலைவர் ஜெகநாதன். ஒன்றிய செயலாளர் பாபு. பெருமாள். ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜா. சதாசிவம். ஆறுமுகம். முன்னாள் ஊராட்சி மன்ற செல்வராசு. வழக்கறி ஞர் திரு சங்கு. உள்பட கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.