தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பதற்றமான பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை கண்டறிந்து அதற்கு தேவையான நடவடிக்கை…
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பதற்றமான பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை கண்டறிந்து அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் பங்கேற்ற தேர்தல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான திருமதி.எஸ்.பி.கார்த்திகா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் தருமபுரி
சார் ஆட்சியர் பிரதாப் தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருமதி.சாந்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.ஆ.தணிகாசலம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்
(நிலம்) திருமதி.நசீர் இக்பால், வட்டாட்சியர் திரு.பாலமுருகன் காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் உள்ளனர்