அரசு தருமபுரி மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனையில்‌ இருதய உள்‌ ஊடுருவி கணிப்பு ஆயவகம்‌ 3.5 கோடி ரூபாய்‌ மதிப்பில்‌ நிறுவ அனுமதி அளிக்கப்பட்டு. உயர்‌ தர கேத்‌ லேப்‌ நிறுவப்பட்டுள்ளது.

Loading

அரசு தருமபுரி மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனையில்‌ இருதய உள்‌ ஊடுருவி கணிப்பு ஆயவகம்‌ 3.5 கோடி ரூபாய்‌ மதிப்பில்‌ நிறுவ அனுமதி
அளிக்கப்பட்டு. உயர்‌ தர கேத்‌ லேப்‌ நிறுவப்பட்டுள்ளது. நிறுவப்பட்ட கேத லேப்‌ 04.02.2021 முதல்‌ பொது மக்கள்‌ பயனபாட்டிற்கு மாண்புமிகு முதலமைச்சர்‌
அவர்கள்‌ காணொலி மூலமாக திறந்து வைத்தார்‌. தருமபுரியில்‌ நடைபெற்ற விழாவில்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ திருமதி. எஸ்‌.பி.கார்த்திகா அவர்கள்‌
குத்துவிளக்கு ஏற்றி வைத்து மருத்துவர்கள்‌ மற்றும்‌ பணியாளர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்‌. உடன்‌ மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்‌
திரு.எஸ்‌. ஆர்‌.வெற்றிவேல்‌, மாவட்ட பால்‌ உற்பத்தியாளர்கள்‌ கூட்டுறவு ஒன்றிய தலைவர்‌ திரு.டி.ஆர்‌.அன்பழகன்‌, அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி முதல்வர்‌
(பொ) மரு.இளங்கோவன்‌, மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர்‌ திரு.பூக்கடை ரவி, தருமபுரி ஒன்றிய குழு தலைவர்‌ திரு.நீலாபுரம்‌ செல்வம்‌,கூட்டுறவு
சங்க தலைவர்கள்‌ திரு.பழனிச்சாமி, திரு.அங்குராஜ்‌,திரு. ஆறுமுகம்‌ ஆகியோர்‌ உட்பட பலர்‌ கலந்து கொண்டனர்‌.

0Shares

Leave a Reply