தலைகுந்தாவில் சோதனை சாவடி அமைத்து கல்லட்டி வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கபட்டு அரசாங்க கெஜட் GAZZETE பதியபட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை மசினகுடி சாலையில் விபத்துக்கள் அதிகமாக நடப்பதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக காவல் துறை சார்பில் தலைகுந்தாவில் சோதனை சாவடி அமைத்து கல்லட்டி வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கபட்டு அரசாங்க கெஜட் GAZZETE பதியபட்டுள்ளது. தற்பொழுது பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் (2-2-2021) அன்று நீலகிரி மாவட்ட காவல் அலுவலகத்தில் 1)முதுமலை பழங்குடியினர் நலச்சங்கம் 2)டாக்டர் அம்பேத்கர் மக்கள் பாதுகாப்பு சங்கம் 3)அருந்ததியர் நலச்சங்கம் 4)நீலகிரி மாவட்ட விவசாயிகள் சங்கம் 5)மகளிர் அமைப்புகள் 6)நீலகிரி மோட்டர்ஸ் டிரைவர் யூனியன் 7)மசினகுடி வியாபாரிகள் சங்கம் 8இந்தியன் ஓட்டுநர் சங்கம் 9)மசினகுடி சுற்றுசூழல் ஆதரவாளர்கள் மன்றம் 10)முதுமலை வன உயிரின இயற்கை பாதுகாப்பு சங்கம் 11)உரிமைகள் பாதுகாப்பு சங்கம் 12)மசினகுடி சுற்றுலா விடுதி உரிமையாளர்கள் சங்கம் 13)கம்யூனிட்டி டெவலப்மென்ட் டிரஸ்ட் 14)உதகை ஓட்டுநர்கள் சங்கம் ஆகிய சங்கங்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சில விதிமுறைகளுடன் கல்லட்டி பாதையில் வாகனங்களை அனுமதிக்க ஆலோசனை செய்யபட்டது. இது தொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அவர்களுடன் கலந்தாலோசித்து உதகை மசினகுடி சாலையில் கல்லட்டி வழியாக வாகனங்களை அனுமதிக்க நடவடிக்கை எடுப்பதாக நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உறுதியளித்தார்