திருவண்ணாமலையில் 6 மாதமாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டதால் பெண்கள் போராட்டம்….

Loading

திருவண்ணாமலையில் வேட்டவலம் சாலை பகுதியில் உள்ள 39-வது வார்டு பகுதியில் கடந்த 6மாதங்களாக குடிநீர் சீராக வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.இதில்
கடந்த 2மாதங்களாக தொடர்ந்து குடிநீர் குழாய் மூலம் குடிநீர் வருவதில்லை என்றும் , இதுபற்றி பலமுறை நகராட்சியிடம் கூறியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் பாதிக்கப்பட்ட திருவண்ணாமலை 39-வது வார்டு பொதுமக்கள் இன்று காலையில் வேட்டவலம் சாலையில் காலி குடத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர் . இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
.இநத போராட்டம் காரணமாக போக்குவரத்து தடை ஏற்பட்டது அப்பகுதி வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும்ஆசிரியர்கள் ,ஊழியர்கள் பெருமளவு பாதிக்கப் பட்டார்கள்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அவர்கள் விரைவில் குடிநீர் சப்ளை செய்யப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்தப் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *