ஸ்ரீபுரம் தங்க கோவில் வளாகத்தில் 1700 கிலோ வெள்ளி விநாயகர் சிலையுடன் கட்டிய சக்தி கணபதி கோவில் கும்பாபிஷேகம் மத்திய மந்திரி வி.கே.சிங் பங்கேற்றார்…
ஸ்ரீபுரம் தங்க கோவில் வளாகத்தில்
1700 கிலோ வெள்ளி விநாயகர் சிலையுடன்
கட்டிய சக்தி கணபதி கோவில் கும்பாபிஷேகம்
மத்திய மந்திரி வி.கே.சிங் பங்கேற்றார்
வேலூர், ஜன.27
வேலூரை அடுத்த ஸ்ரீபுரத்தில் உலகபுகழ் பெற்ற நாராயணி பீடமும் லட்சுமி
நாராயணி தங்க கோவிலும் உள்ளது. இதை, அருள்திரு சக்தி அம்மா நிறுவி
நடத்தி வருகிறார். தற்போது பக்தர்களின் கோரிக்கைக்கு ஏற்ப தங்க கோவில்
வளாகத்தில் சுமார் 700 டன் எடை உள்ள கருங்கற்களால் ரூ.15 கோடி செலவில்
சக்தி கணபதி கோவில் புதிதாக கட்டப் பட்டு உள்ளது.
கோவிலில் சிறப்பு அம்சமாக 1700 கிலோ வெள்ளியில் விநாயகர் சிலை
பிரம்மாண்டமாக வடிவமைத்து வைக்கப்பட்டு உள்ளது. இந்த கோவிலின்
கும்பாபிஷேக விழா நேற்று முன் தினம் நடந்தது. சிறப்பு விருந்தினராக
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை இணை மந்திரி வி.கே.
சிங் கலந்து கொண்டார். விழாவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்
பட்டது.
அதைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க மகா யாகத்துடன்
கும்பாபிஷேகத்தை சக்தி அம்மா நடத்தி வைத்தார். கோவில் கோபுர கலசத்தில்
சக்தி அம்மா புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். சிறப்பு
அழைப்பாளர்களாக மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம், போலீஸ் சூப்பிரெண்டு
செல்வகுமார், ரத்தினகிரி பாலமுருகன் அடிமை சுவாமிகள், தருமபுரம்
மாய்ஸ்லாமணி சுவாமிகள், வாலாஜா தன்வந்திரி முரளிதர சுவாமிகள், கலவை
சச்சிதானந்த சுவாமி, வரபிரசாத் ரெட்டி, சத்திய பூஷன் ஜெயின்,
எம்.எல்.ஏக்கள் கார்த்திகேயன், நந்தகுமார், ஸ்ரீபுரம் நாராயணி பீடம்
இயக்குனர் சுரேஷ்பாபு, நாராயணி மருத்துவமனை இயக்குனர் பாலாஜி, அறங்காவலர்
சவுந்தர்ராஜன், நாராயணி பீடம் மேலாளர் சம்பத், மத்திய இணை மந்திரியின்
மனைவி பாரதி, வெள்ளி விநாயகர் சிலை வடித்த ராதா கிருஷ்ணன ஸ்தபதி மற்றும்
பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.