திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முதலமைச்சரின் ௮ம்மா மினி கிளினிக் கிராமப்புற மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றுள்ளது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முதலமைச்சரின் ௮ம்மா மினி கிளினிக் கிராமப்புற
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றுள்ளது. சிகிச்சை பெற்ற ஏழை, எளிய
மக்கள் தமிழ்நாடு அரசுக்கு நன்றி.
முதலமைச்சரின் அம்மா மினிகிளினிக் மூலம் கிராமங்களில் பொதுமக்களுக்கு
உயாதர சிகிச்சை வழங்கப்படுகிறது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு 58
முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்க ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. இதுவரை 22 அம்மா மினி கிளினிக்குகள் மக்கள்
பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள அம்மா மினி கிளினிக்குகள்
விரைவில் திறக்கப்படும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொது மக்களின்
முன்னேற்றத்திற்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த
வகையில் கிராமப்புற ஏழை, எளிய பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு
மக்களுக்கும் உயர் தரமான மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில்
அரசு ஆரம்ப சுகாதாரம் நிலையம் இல்லாத பகுதிகளை கண்டறிந்து அங்கு
முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகளை துவங்க மாண்புமிகு தமிழ்நாடு
முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டூள்ளார்கள்.
அந்த வகையில் சாதாரண காய்ச்சல், தொற்றா நோய் போன்ற நோய்களுக்கு
உடனடி சிகிச்சை அளிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 2,000 எண்ணிக்கையில்
முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகள் துவங்கப்பட்டு வருகிறது.
இதில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மட்டும் 58 எண்ணிக்கையில்
முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகள் துவங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் பன்னாங்கொம்பு மற்றும்
மணப்பாறை, மாரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் தாயனூர், திருவெறும்பூர் சட்டமன்ற
தொகுதியில் வேங்கூர், இலால்குடி சட்டமன்ற தொகுதியில் வி.துறையூர் மற்றும்
புதார்பாளையம், முசிறி சட்டமன்ற தொகுதியில் வெள்ளுர், நீலியாம்பட்டி, மணமேடூ
மற்றும் வளையெடுப்பு, துறையூர் சட்டமன்ற தொகுதியில் வி.ஏ.சமுத்திரம் மற்றும்
முருங்கப்பட்டி, மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் திருப்பஞ்சலி, ஐயம்பாளையம்,
திருத்தியமலை, சின்னகொடுந்துறை, திருச்சிராப்பள்ளி (கிழக்கு) சங்கிலியாண்டார்புரம்
மற்றும் கே.சாத்தனூர் மற்றும் பல்வேறு கிராமங்களில் இதுவரை 22 முதலமைச்சரின்
அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் அம்மா மினி கிளினிக்குகள் விரைவில்
திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் அம்மா மினி
கிளினிக்கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் மருத்துவமனைப் பணியாளர்
ஆகியோர் பணியில் இருப்பார்கள். இந்த மினி கிளினிக் பேரூராட்சிகள் மற்றும் கிராமப்புற
பகுதிகளில் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி
வரையிலும் செயல்படும். சனிக்கிழமை மட்டும் விடுமுறை நாளாகும்.
இந்த மினி கிளினிக்கில் சக்கரை அளவு, ஹச்பி ௮ளவு, சிறுநா அல்புமின் ௮ளவு,
சிறுநார சர்க்கரை, சளி பரிசோதனை, சிறுநர் மூலம் கர்ப்பத்தை உறுதி செய்தல் ஆகிய
பரிசோதனைகள் செய்யப்படும். மேலும் தொற்றா நோய்களுக்கான சிகிச்சைகள், புற
நோயாளிகள் தொடர்பான அனைத்து சிகிச்சைகள், சிறுகாயங்களுக்கான சிகிச்சைகள்,
சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஆகியவற்றிற்கான சிகிச்சைகள்
வழங்கப்படும்.
மேலும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பொதுவான சிகிச்சைகள்,
முதியோருக்கான சிகிச்சைகளும் வழங்கப்படும். இதே போன்று சர்க்கரை
நோயாளிகளுக்கான மருந்துகள், உயர் இரத்த அழுத்த மருந்துகள், காய்ச்சல், சளி
போன்றவற்றிற்கான மருந்துகள், சத்து மாத்திரைகள், சிறு காயங்களுக்கான மருந்துகள்
மற்றும் புற நோயாளிகளுக்கான அனைத்து மருந்துகளும் மினி கிளினிக்குகளிலேயே
வழங்கப்படும்.
இந்த மினி கிளினிக்குகள் மூலம் பொதுமக்களுக்கு தங்களது
இருப்பிடங்களிலேயே மருத்துவ சிகிச்சை கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே
இதனை பொது மக்கள் உரிய முறையில் பயன்படுத்தி நோயற்ற நல்வாழ்வு
வாழவேண்டும்.
பெரியப்பட்டி கிராமத்தைச்சேர்ந்த திரு.கருப்பையா மகன் திரு.சுப்பையா என்பவர்
தெரிவித்ததாவது:
பெரியப்பட்டி கிராமத்தில் அம்மா மினிகிளினிக் தொடங்கப்பட்டூள்ளது. எங்கள்
கிராமத்தில் அரசு மருத்துவக்கிளினிக் தொடங்கப்பட்டூுள்ளதால் வயதானவர்கள் தொலை
தூரம் சென்று சிகிச்சை மேற்கொண்டுூவந்த நிலைமாறி தங்களுடைய கிராமத்திற்கே மினி
மருத்துவக்கிளினிக் திறக்கப்பட்டூுள்ளது. சளி காய்ச்சல் இருந்தால் அம்மா மினிகிளினிக்
சென்று சிகிச்சை பெற்றுக்கொண்டேன். உரிய நேரத்தில் சரியான சிகிச்சை
எடூத்துக்கொண்டதால் நலமாக வசித்து வருகிறேன். அம்மா மினிகிளினிக் சிறப்பான
சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கிராம மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஏழை, எளிய மக்கள்
இந்த மினி கிளினிக்கில் சர்க்கரை அளவு, ஹச்பி அளவு, சிறுநர் அல்புமின் அளவு,
சிறுநர் சர்க்கரை, சளி பரிசோதனை, சிறுநீர் மூலம் கர்ப்பத்தை உறுதி செய்தல் ஆகிய
பரிசோதனைகள் செய்யப்படும். மேலும் தொற்றா நோய்களுக்கான சிகிச்சைகள், புற
நோயாளிகள் தொடர்பான அனைத்து சிகிச்சைகள், சிறுகாயங்களுக்கான சிகிச்சைகள்,
சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஆகியவற்றிற்கான சிகிச்சைகள்
அளிக்கின்றனர். இது போன்ற மருத்துவக்கிளினிக் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள் எங்கள் கிராமத்தில் தொடங்க உத்தரவிட்டு தொடங்கப்பட்டுள்ளது எங்கள்
கிராமத்திற்கு கிடைத்த வரபிரசாதமாகும். எங்கள் கிராமத்தில் உள்ள மினிகிளினிக்
காலை 8 மணி முதல், மதியம் வரை மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை
செயல்படுகிறது. இந்த மருத்துவமனையில் சனிக்கிழமை மட்டூம் விடுமுறை
அறிவித்துள்ளனர். இந்த அரசுக்கு நாங்கள் என்றென்றும் உறுதுணையாக இருப்போம்.
மணப்பாறை வட்டம் கண்ணுடையான்பட்டி திருமதி.ஜானகி வயது 55 என்பவர்
தெரிவித்ததாவது:
கண்ணுடையான்பட்டி கிராமத்திற்கு அம்மா மினி கிளினிக் திறக்க
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ௮வர்கள் உத்தரவிட்டு தற்போது எங்கள் பகுதி
மக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது. வயதான காலத்தில் சளி,
காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை
அளிக்கின்றனர். எனக்கு சளி தொந்தரவு இருந்தது. அம்மா மினிகிளினிகிற்கு சென்று
சிகிச்சை பெற்றுக் கொண்டேன். மருத்துவர்கள் சிறப்பான சிகிச்சை எனக்கு
அளித்தார்கள்.
எங்கள் கிராமத்திலேயே மினிகிளினிக் தொடங்கப்பட்டுள்ளது. ஏழை எளிய
மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. அம்மா அவர்களின் அரசுதான் கடைகோடி
கிராமத்தில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கும் வீடு தேடி நலத்திட்ட உதவிகள் வழங்கி
வருகின்றனர். அம்மா அவர்களின் அரசுதான் ஒவ்வொரு வீட்டிற்கும் 100 யூனிட் வரை
இலவச மின்சாரம் வழங்கி வருகிறது. மேலும் மின்சார உற்பத்தியில் இந்த அரசு
தன்னிரைவு பெற்றுள்ளது. 24 மணி நேரமும் மின்சாரம் வீடுகளுக்கு வழங்கி வருகின்றனர்.
இந்த அரசு அறிவித்த பொங்கல் பண்டிகைக்கு ரூ.2500 ரொக்கப்பணம், பச்சரிசி 1
கிலோ சர்க்கரை 1 கிலோ, முந்திரி 20 கிராம், திராட்சை 20 கிராம், ஏலக்காய் 5
கிராம், முழு கரும்பு ஒன்று, துணிப் பை ஒன்று. போன்ற தொகுப்பு எனக்கும்
கிடைத்தது. மேலும், இலவச வேட்டி சேலையும் வழங்கினார்கள். எங்கள் கிராமத்திற்கு
மினிகிளிக் தொடங்க உத்தரவிட்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நாங்கள்
என்றென்றும் நன்றி கடன்பட்டவர்களாக இருப்போம்.
தொகுப்பு:
ரெ.சிங்காரம், எம்.ஏ.,பி.எல்.,
உதவி இயக்குநர்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
திருச்சிராப்பள்ளி.