காட்பாடி பெண்கள் பள்ளியில் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பள்ளி திறப்பு.
வேலூர் மாவட்டம் காட்பாடி பெண்கள் பள்ளியில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டுதல்களின் படி இன்று காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகள் பள்ளிக்கு வருகை தந்தனர். பள்ளிக்கு வருகை தந்த மாணவியர் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு கைகளை சுத்தம் செய்துக்கொண்டு வகுப்பிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஒரு வகுப்பில் 25 மாணவிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். மாணவிகள் உற்சாகத்துடன் அதே நேரத்தில் உரிய கட்டுப்பாட்டுடன் முக கவசம் அணிந்து பள்ளிக்கு வருகை தந்தனர்.பள்ளித் தலைமையாசிரியர் கோ.சரளா, உதவித்தலைமையாசிரியைகள் டி.என்.ஷோபா, திருமொழி, ஜுனியர் ரெட்கிராஸ் ஆலோசகர் தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன் ஆகியோர் வகுப்பில் மாணவியருக்கு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தெரிவித்தனர்.மாணவர்கள் மற்றம் ஆசிரியர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பள்ளிக்கு வருகை தந்தனர். ஆர்வமுடன் கல்விப்பணியில் பங்கேற்றனர்.