ஒட்டன்சத்திரம் சத்யா நகர் 16 வது வார்டில் பொங்கல் விழா சட்டமன்ற உறுப்பினர் அர.சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சத்யா நகர் 16 வது வார்டில் பொங்கல் விழா திண்டுக்கல் மேற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய செயலாளரும் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினறுமான அர.சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது.மேலும் பொங்கல் விழாவில்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 50 திற்கும் மேற்பட்டோர் திராவிடத்தாய் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டதற்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக நன்றி பாராட்ட கடமைப்பட்டு இருக்கிறோம் என்றார். இதைெயடுத்து அவர்கள் எந்த கருத்தோடு தங்களை இந்த திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைத்துக் கொள்கிறார்களோ அதேபோல் வெற்றி பெறும் வரை சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றும் அவர்களுைடையே தேவைகைளை வெகுவிரைவிலே
செய்துகொடுப்போம் என்றும் உறுதி அளித்து சிறப்புரையாற்றினார்.
மேலும் பொங்கல் நிகழ்ச்சியில் பாரம்பரிய வீர விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கியும் ஊக்கத் தொகைகள் வழங்கியும் பொங்கல் விழாவினை சிறப்பித்தார் மற்றும் பொங்கல் விழாவில் தி.மு.க.16வது வார்டு செயலாளர் மு.ஆறுமுகம்,தி.மு.க 15வது வார்டு செயலாளர் தி.வடிவேல்தி.மு.க 16வது வார்டு துணைச் செயலாளர் பொன். சரவணன், பொருளாளர்,பெ.முனியாண்டி பிரதிநிதிகள் சு. மகுடீஸ்வரன், இல. கோபால் ஆதிதிராவிட நல குழு அமைப்பாளர் க. திருமலைச்சாமி துணை அமைப்பாளர் சு.பழனிச்சாமி நகர ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் சு.பாலகிருஷ்ணன் BLO அழ.துரைராஜ் மேலும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு பொங்கல் விழாவை சிறப்பித்தனர்.