மாண்புமிகு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி திரு.ந.தளவாய் சுந்தரம் அவர்கள் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலையன் திருக்கோவிலில் நடைபெற்ற சிறப்பு கோசாலை மற்றும் மாட்டுப்பொங்கல் விழாவில் கலந்து கொண்டார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி திரு.ந.தளவாய் சுந்தரம் அவர்கள்,இந்து சமய அறநிலையத்துறை சார்பாக, சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலையன் திருக்கோவிலில் நடைபெற்ற சிறப்பு கோசாலை மற்றும் மாட்டுப்பொங்கல் விழாவில்
கலந்து கொண்டார்கள். உடன் மாவட்ட ஆவின் பெருந்தலைவர் திரு.எஸ்.ஏ.அசோகன், இணை ஆணையர் (இந்து சமய அறநிலையத்துறை) திரு.எம். அன்புமணி,
அறங்காவலர் குழுத்தலைவர், இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்படாத திருக்கோவில் சுசீந்திரம், திரு.சிவ குற்றாலம், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய பெருந்தலைவர் திரு.எஸ்.கிருஷ்ணகுமார்,அறங்காவலர் குழு உறுப்பினரும், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவருமான திரு.எஸ்.அழகேசன் ஆகியோர் உள்ளார்கள்.