பனை விதை பண்ணை,அரசு புறம்போக்கு இடங்கள் தேவை

Loading

பனைமரம், பனை விதை, பனை பண்ணை, மற்றும், பனைமரக்கன்றுகள் உற்பத்தி செய்து கிராம ஊராட்சிகளுக்கு இலவசமாக வழங்க பூமிதான இடங்கள், மற்றம் அரசு புறம்போக்கு இடங்களை வழங்க கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு..
தமிழ்நாடு பனைத் தொழிலாளர்கள் மற்றும் அனைத்து உடல் உழைப்பு கட்டுமான பொது தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளராக மாரியப்பன் இருந்து வருகின்றார். இவரது தலைமையில், கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமாரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்று வழங்கப்பட்டது.. அந்த மனதில் தமிழ்நாடு பனைத் தொழிலாளர்கள் மற்றும் அனைத்து உடல் உழைப்பு கட்டுமான பொது தொழிலாளர்கள் நல வாரிய சங்கம் மாநில அளவில் பதிவு செய்யப்பட்டு கோவை மாவட்டத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. இந்த சங்கத்தின் சார்பாக பனைமரம் வளர்ப்பது, அதன் பயன்களை மக்களுக்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி வருகிறோம். அரசு பதிவு பெற்ற சங்கமாக இந்த சங்கம் இருந்து வருகின்றது. தமிழ்நாட்டின் தேசிய மரமான பனை மரத்தை கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், மாவட்ட ஆட்சித் தலைவர் அனுமதியுடன் நடுவதற்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் குறைந்தது 1500 மரக்கன்றுகள் தேவை என்பதை உணர்ந்துள்ளோம். நாங்கள் அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் தலா, 1500 பனை விதைகள் விநியோகம் செய்வதற்கு தயாராக உள்ளோம் எனவும், இவ்வாறு செய்வதால், அழிந்து போன பனைமரம் மீண்டும் உயிர் பெறுவதற்கு அதிகமான வாய்ப்பு உள்ளது. அரசின் உதவியுடன் இலவசமாக மரக்கன்றுகளை வளர்த்து, கிராம ஊராட்சிகளில் நடவு செய்ய முடியும், ஆனால் இத்தனை பனை மரங்களை வளர்ப்பதற்கு தங்களிடம் போதுமான இட வசதி இல்லை எனவே, அரசிடம் உள்ள பூமிதான இடங்கள் மற்றும் பொறம்போக்கு இடங்களை கணக்கிட்டு எங்களுக்கு அதனை தெரியப்படுத்தி அந்த இடங்களில் பனை மரங்களை வளர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
0Shares