கோவை காந்திபார்க் முனிஸ்வரன் திருக்கோவில் திருவிழா
![]()
கோவை காந்தி பார்க்கில் 260 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு அரசமரத்தடி ஶ்ரீ சக்தி மகா முனீஸ்வரர், மஹா காலபைரவர் திருக்கோயில் திருவிழா, 1500க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கறி விருந்து நடத்த திட்டம்!!!

கோவை காந்தி பார்க் அருகில் உள்ள சுந்தரம் வீதியில் 260 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு அரசமரத்தடி ஶ்ரீ சக்தி மகா முனீஸ்வரர், மஹா காலபைரவர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலின் 160 ஆம் ஆண்டு ஆடி மகா உற்சவ திருவிழா நிகழ்ச்சியானது வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியானது ஆனி மாதம் 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது மற்றும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி சுந்தரம் வீதி சித்தி விநாயகர் கோவிலில் இருந்து கரகம் மற்றும் அணிக்கூடை ஊர்வலம் பக்தர்கள் தலையில் சுமந்து திருவீதியுலா வந்தனர். ஆகஸ்ட் 5 ஆம் தேதி முனிஸ்வரர் கோவிலில் மாவிளக்கு வைத்து , பச்சை காளி, பவளக்காளி ஆட்டத்துடன் முனீஸ்வரர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஊர்வலமாக வந்தார். பம்பை வாத்தியம், கைலாய வாத்தியம் மற்றும் ஜமாப் இசை முழங்க ஆடல், பாடலுடன், சாமியை அழைத்து வந்த பக்தர்கள் பக்தி பரவசத்தில் உற்சாக நடனம் ஆடினர்.
இதில் திருக்கோயில் விழாத்தலைவர் நாகராஜ் மற்றும் பழனி ஆதினம் சீடர் திருக்கோயில் அர்ச்சகர் புலிப்பாணி சுதாகரன் சுவாமிகள், திருக்கோயில் முன்னால் நிர்வாகி.. அமீர் பாய், கோபால் அய்யா, சுரேஷ், நல்லையன், சிவலிங்கம், பிரபு, வரதராஜ், தயிர் தம்பு, ஆட்டோ ஆனந்தன், குமார், உமர், சுந்தர் ராஜ், வினோத், ஜெகதீசன், முரளி, ஶ்ரீ பிரசாந்த், ரூபவிக்னேஷ், மனோஜ், உள்ளிட்ட பலர் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். தொடர்ந்து இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய.. பாச உள்ளம் சமூக நல மக்கள் அமைப்பின் நிறுவனர் கோவை கோகுல் கூறியதாவது.. இக்கோவிலில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கிடா வெட்டு அன்னதானம் மதியம் 12 மணியளவில், கோவில் முன்பு நடைபெற உள்ளது
இதில் சுமார் 1500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்ளுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

