கோவையில் ஃபிசிக்ஸ் வாலா நிறுவனம்தொழில்நுட்பம்

Loading

கோவை
கோவையில் ஃபிசிக்ஸ் வாலா நிறுவனம், தனது முதல் தொழில்நுட்பம் சார்ந்த ஆஃப்லைன் வித்யாபீத் மையத்தைத் தொடங்கியுள்ளது
இதனால் மாணவ மாணவியர்களில் கற்றல் திறன் மேம்படும் என தகவல்..
கல்வி தொழில்நுட்ப நிறுவனமான ஃபிசிக்ஸ் வாலா நிறுவனம், கோவை ஆர்.எஸ்.புரத்தில் புதிய தொழில்நுட்பம் சார்ந்த முழுமையான ஆஃப்லைன் மையத்தைத் தொடங்கியது இதனை ஃபிசிக்ஸ் வாலா நிறுவனத்தின், மூத்த துணைத் தலைவர் அமித் சிங் ரத்தோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து செய்தியாளர்களிடம் இம்மையம் குறித்து கூறியதாவது..
இந்த மையத்தில், கற்றலுக்கு உகந்த சூழலை வழங்கும் பல தொழில்நுட்ப வசதிகள் கொண்ட ஸ்மார்ட் வகுப்பறைகள், டிஜிட்டல் போர்டுகள் மற்றும் நேரடி கற்றலை மேம்படுத்தும் உள்கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மாணவர்கள் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களிடம் நேரடியாகக் கல்வி பயிலலாம் என கூறினார். ஃபிசிக்ஸ் வாலா வித்யாபீத், ஆஃப்லைன் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி அங்கித் குப்தா கூறியதாவது.. ஃபிசிக்ஸ் வாலா-வில், மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்துவதற்கான வழிகளைத் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம். தரமான கல்விக்காக மாணவர்கள் மற்ற நகரங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இனி இல்லை என்று நாங்கள் நம்புகிறோம் என்றார். இம்மையமானது மாணவர்களின் மன ரீதியான அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் கோவையில், ஃபிசிக்ஸ் வாலா வித்யாபீத் மையம் எனும், மையத்தை திறப்பதன் மூலம், தொழில்நுட்பம் சார்ந்த தரமான கல்வியை மாணவர்களின், வீட்டிற்கு அருகிலேயே கொண்டு வருவதையும், நாடு முழுவதும் அதிக கல்வி மையங்களை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்,” என்றார். இங்கு மாணவர்களுக்கு, ஜேஇஇ, நீட் , உள்ளிட்ட தேர்வுகளுக்கு விரிவான பாடத்திட்டங்களை வழங்குவதோடு, ஒலிம்பியாட் போன்ற கல்வித் தேர்வுகளிலும் கவனம் செலுத்துகின்றது. மேலும், பதிவு செய்யப்பட்ட விரிவுரைகள் பொருட்களுக்கான உதவி, ஆஃப்லைன் சந்தேகத் தீர்வுகள், தினசரி பயிற்சித் தாள்கள், சிறப்பு தொகுதிகள் செயல்முறை சார்ந்த கற்றல் முறைகளை வழங்குகின்றது என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0Shares