இனிய தமிழ் புத்தாண்டு பெயிரா வாழ்த்து
![]()
இனிய தமிழ் புத்தாண்டு – கனவுகள் மெய்ப்படட்டும். புதிய நம்பிக்கைகள் மலரட்டும் பெயிரா வாழ்த்து
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள், உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களுக்கு தனது மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ……
“சித்திரை திருநாளாம் இந்நன்னாளில் நமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தலைத்தோங்கிடவும், நம் அனைவரின் வாழ்வில் புதிய நம்பிக்கையினையூட்டி, இனிய துவக்கத்தினை கொடுத்து, துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சி பொங்கிட, செல்வ செழிப்பு பெருகிட, அமைதி, அன்பு, அறம் மலர்ந்திட, ஆரோக்கியமும் ஆயுளும் கூடி, முயற்சிகள் அனைத்தும் வெற்றி கண்டு, கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் துறை
மேலும் தமிழர்கள் தமிழ் புத்தாண்டு பண்டிகையை எவ்வாறு கொண்டாடி மகிழ்கிறார்கள் என்பதனையும் எளிய நடையில் அழகுற பதிவு செய்துள்ளார்.
தமிழ் புத்தாண்டினை வரவேற்கும் விதமாக மக்கள் தங்களது இல்லங்களை தூய்மைப்படுத்தி, உள்ளங்களை சீர்படுத்தி, வாசலில் அரிசி பொடிளை கொண்டு அழகிய கோலங்கள் இட்டு, வாழ்வின் இருளைப் போக்கி ஒளியினை வரவேற்கும் விதமாக குத்துவிளக்கு ஏற்றி மலர்களை கொண்டு அழகுபடுத்தி தமிழ் புத்தாண்டை மகிழ்வுடன் வரவேற்பார்கள்.
மேலும் நமது முன்னோர்களின் வழக்கப்படி ஒரு பெரிய தட்டில் முக்கனிகள், காய்கறிகள், அரிசி, வெற்றிலை பாக்கு, பணம், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், பூக்கள் மற்றும் முகம் பார்க்கும் கண்ணாடியினையும் வைத்து தமிழ் புத்தாண்டிற்கு முன் இரவு கடவுளை வழிப்பட்டு பூஜை செய்து, பூஜை அறையில் வைப்பதனை மரபாக கடைபிடித்து வருகின்றனர்.
இந்த மரபிற்கு காரணம் தமிழ் புத்தாண்டு தினத்தன்று அதிகாலை எழுந்து முதலில் நம் கண்கள் மங்களகரமான காட்சியை காணும் பொழுது, தங்களது வாழ்வில் முக்கனிகளை போல் ஆரோக்கியம் மேம்படவும், அரிசியினை போல் ஊட்டத்தினை தந்திடவும், பணம் செல்வ செழிப்பை கொடுத்திடவும், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் அழகையும், அலங்காரத்தையும் தங்கள் வாழ்வில் வழங்கிடும் என்கின்ற நம்பிக்கையின் அடிப்படையில் இம்மரபினை பின்பற்றுகின்றனர். அதிகாலையில் நீராடி, புத்தாடை அணிந்து, கோவிலுக்கு சென்று இறைவனிடம் நன்மைகளை நாடி மனமுருக வழிபட்டு, பெரியோர்களிடம் நல்வாழ்வு வேண்டி ஆசிர்வாதம் பெற்று, உற்றார் உறவினர்களுடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது தமிழ் புத்தாண்டின் சிறப்பாகும். மேலும் வாழ்க்கை என்றால் இனிப்பும் – கசப்பும் கலந்தது தான் என்பதனை உணர்த்திடும் வகையில் மாங்காய் பச்சடி – வேப்பம்பூ பச்சடி ஆகியவைகளை உண்பதை வழக்கமாக கடைபிடிக்கின்றனர்.
புதிய நம்பிக்கையுடன் தொடங்கும் இந்தத் தமிழ் புத்தாண்டு, கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் துறை சார்ந்தவர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஒரு பொற்காலமாக அமையட்டும். இந்த மகிழ்ச்சி இந்நாள் போல் எந்நாளும் தொடர வேண்டுமென FAIRA தலைவர் டாக்டர் ஹென்றி தனது தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

