வார பாத்தியம் குறித்து விழிப்புணர்வு-ஹென்றி
![]()
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஹென்றி அவர்கள் “வார பாத்தியம்” (Joint Ownership) குறித்து பொதுமக்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விழிப்புணர்வு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு செய்தியில் …
தமிழ்நாட்டில் நிலம் சம்பந்தமான பல்வேறு ஆவணங்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சார்பில் இன்றைய விழிப்புணர்வு பதிவாக “வார பாத்தியம்” என்றால் என்ன?, அதன் வகைகள் மற்றும் வார பாத்தியம் உள்ள நிலங்களை வாங்கும்போது எதிர்கொள்ளும் நடைமுறை சிக்கல்கள் மற்றும் நிலத்தை பாதுகாப்பாக வாங்குவதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த அனைத்து தகவல்களையும் தெளிவாகவும், எளிமையாகவும் இப்பதிவில் விளக்கியுள்ளார்.
“வார பாத்தியம்” என்பது ஒரு நிலம் ஒரே நபருக்குச் சொந்தமாக இல்லாமல், பலருக்கு பங்குகளாக உரிமை இருப்பதை (கூட்டு உரிமை) குறிக்கும் வருவாய்த் துறையின் பாரம்பரிய சொல் ஆகும். வார பாத்தியம் என்பதனைக் குறித்து எளிமையாக சொல்வதென்றால், உதாரணமாக ஒரு குடும்பத்திற்கு சொந்தமான நிலம் சம்பந்தப்பட்ட குடும்பத்தின் நாலு அண்ணன், தம்பிகளுக்கு பிரித்துக் கொடுக்கப்படாமல் இருக்கும் பட்சத்தில் அதற்கு கூட்டு பட்டா இருக்கும். இதனையே வருவாய் துறையில் வார பாத்தியம் என குறிப்பிடுகின்றார்கள்.
அதுபோல் நிலத்தின் கூட்டு உரிமை என்பது ஒரு புல எண்ணில் (Survey Number) உள்ள நிலம், கூட்டுப் பட்டாதாரர்களுக்குச் சொந்தமாக இருப்பதைக் குறிக்கும். நிலத்தின் உரிமையாளர்கள் தங்களுக்குள் பிரித்துக்கொண்ட அல்லது பங்குகளாக வைத்திருக்கும் உரிமையாகும். இதில், மொத்த நிலப் பரப்பில் ஒவ்வொரு நபருக்கும் உரிய தனித்தனிப் பங்குகள் அல்லது கூட்டுப் பங்குகள் சிட்டா ( chitta) மற்றும் பட்டா
வார பாத்தியத்தின் வகைகள் பற்றி பார்ப்போம். ஒரு வார பாத்தியம் என்பது ஒரே நபருக்கு 100% உரிமையை குறிப்பதாகும். இரு வார பாத்தியம் என்பது தலா இரண்டு பேர்களுக்கான உரிமையை குறிப்பதாகும். மூன்று / நான்கு வார பாத்தியம் என்பது பலருக்கு உரிமையுள்ள பங்குகளாக அதாவது கூட்டு உரிமை ஆகும்.
அடுத்து, “வார பாத்தியம்” உள்ள நிலங்களை வாங்குவதில் உள்ள பிரச்சனைகள் மற்றும் சட்ட சிக்கல்களை விரிவாக காண்போம்.

