அரசியலில் புறக்கணிக்கப்படுகிறார்களா நாடார்கள்

Loading

அரசியலில் புறக்கணிக்கப்படுகிறார்களா நாடார்கள்? – கொங்கு மண்டலத்தில் வெடிக்கும் புதிய அரசியல் முழக்கம்!**
தமிழக அரசியலில் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பெரும் பங்காற்றி வரும் நாடார் சமூகம், அரசியல் கட்சிகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக நாடார் ஒருங்கிணைப்புக் குழு ஈரோட்டில் பேட்டி.
நாடார் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் காமராஜ் ஈரோடு கடோக் கஜா ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார்;
அப்போது பேசிய அவர், 
திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக போன்ற பிரதான கட்சிகள் நாடார் சமூகத்தை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்துவதாகவும், உரிய கட்சிப் பொறுப்புகளோ அல்லது தேர்தல் வாய்ப்புகளோ வழங்காமல் அவமதிக்கின்றனர்.
 குறிப்பாகக் கொங்கு மண்டலத்தில் நாடார் சமூகத்தினர் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதாகவும், அரசு விழாக்களிலும் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் மறுக்கப்படுகிறது. இதன் காரணமாக மொடக்குறிச்சி, கோபி மற்றும் எடப்பாடி சட்டமன்ற தொகுதிகளில் நாடார் சமுதாயத்தை சேர்ந்த வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் சுயமாகவும், சமூகத்தின் சார்பாகவும் களம் காணும் பாரதி, எஸ்.கே. தனபால் வேட்பாளர்களுக்கு  பல்வேறு தரப்பிலிருந்து மிரட்டல்கள் வருகிறது.
  அழுத்தங்களுக்குப் பணியப் போவதில்லை என ஒருங்கிணைப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் வரும் ஏப்ரல் 23 இல் நடைபெற உள்ள சட்டமன்றதேர்தலில் தங்களின் பலத்தை நிரூபிக்க, முதற்கட்டமாக 3 முக்கிய தொகுதிகளில் தீவிர களப்பணியை ஒருங்கிணைத்துள்ளோம்.இந்தத் தொகுதிகளில் நாடார் சமூக வேட்பாளர்களின் வெற்றிக்காக 5000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழுவினர் தீவிரமாகச் செயலாற்றி வருகின்றனர்
நாடார் சமூகத்தின் இந்த எழுச்சிக்கு ஆதரவாகப் பல்வேறு அமைப்புகள் கைகோர்த்துள்ளன..
 பச்சைத் தமிழன் மக்கள் கட்சி, சான்றோர் மகாஜன சங்கம்,நாடார் மகாஜன சங்கங்கள் மற்றும் பெரிய சங்கங்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளது.
அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் சமூகமாக இருந்தும், அரசியலில் தகுந்த அங்கீகாரம் கிடைக்காத சூழலை மாற்ற 234 தொகுதிகளிலும் தங்களின் குரலை ஒலிக்கச் செய்ய நாடார்கள் முடிவு செய்துள்ளோம்.
அடிமைப்படுத்தும் சூழலை ஒழிப்போம், அரசியல் அதிகாரத்தைப் பெறுவோம் என்பதே எங்களது கொள்கை என்றார்.
0Shares