பட்டா இல்லாமல் எந்த நிலத்தையும் வாங்ககூடாது
![]()
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஹென்றி அவர்கள் வருவாய் துறை பதிவுகளில் “புறக்குடியார்” – பொதுமக்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல் குறித்து விழிப்புணர்வு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு செய்தியில் …
தமிழகத்தில் நிலம் வாங்குதல் மற்றும் குடியிருப்பு தொடர்பான செயல்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், வருவாய் துறை பதிவுகளில் இடம்பெறும் “புறக்குடியார் / புறக்குடிகள்” என்ற சொல்லின் உண்மையான பொருளை பொதுமக்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகிறது.
இதுகுறித்து அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஹென்றி அவர்கள், பொதுமக்களின் நலன் கருதி வெளியிட்டுள்ள விழிப்புணர்வு செய்தியில் கூறியதாவது:
“புறக்குடியார்” என்பது ஒரு நிலத்தில் வசித்து வரும் நபரை குறிக்கும் நிர்வாக பதிவு மட்டுமேயாகும். இது அந்த நபருக்கு அந்த நிலத்தின் மீது சட்டபூர்வமான சொத்து உரிமை (Ownership) இருப்பதாக அர்த்தமல்ல. உண்மையான உரிமை என்பது “பட்டா” மூலம் மட்டுமே உறுதி செய்யப்படுகிறது.
நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக கிராமப்புறங்களில், பல ஆண்டுகளாக ஒரு நிலத்தில் வசித்து வருவதன் அடிப்படையில் தங்களுக்கு அந்த நிலத்தின் உரிமை உள்ளது என்று சிலர் தவறாக கருதுகின்றனர்.
ஆனால், வசிப்பு (Possession) மற்றும் உரிமை (Ownership) ஆகியவை இரண்டும் முற்றிலும் வேறுபட்டவை என்பதைக் குறிப்பிடுவது முக்கியம். புறக்குடியார் பதிவு உள்ள நிலங்களை வாங்கும் போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இத்தகைய நிலங்களில்:உரிமை தொடர்பான சட்ட சிக்கல்கள் உருவாக வாய்ப்பு உள்ளது.பட்டா மாற்றம் செய்ய முடியாமல் போகலாம்.வங்கி கடன் பெற சிரமம் ஏற்படலாம். எதிர்காலத்தில் வழக்குகள் மற்றும் அரசின் நடவடிக்கைகள் ஏற்படலாம்.
எனவே, நிலம் வாங்கும் முன் பட்டா சரிபார்ப்பு, சிட்டா, அடங்கல் பதிவுகள் ஆய்வுஉரிமையாளர் உறுதி, அரசு அனுமதிகள் சரிபார்ப்பு போன்ற நடவடிக்கைகள் கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அதே நேரத்தில், நீண்டகாலமாக அரசு நிலங்களில் வசித்து வரும் புறக்குடியார்களுக்கு, அரசு விதிமுறைகளின் அடிப்படையில் பட்டா வழங்கப்படும் வாய்ப்புகளும் உள்ளன. இதற்காக சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகத்தை அணுகி சட்டப்படி விண்ணப்பிக்கலாம்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு:“புறக்குடியார்” என்பது சொத்து உரிமையை குறிக்காது. பட்டா இல்லாமல் எந்த நிலத்தையும் வாங்குவது எதிர்காலத்தில் பெரும் இழப்புகளுக்கு வழிவகுக்கும்.
எனவே, பொதுமக்கள் நிலம் வாங்கும் முன் அனைத்து சட்டப்பூர்வ ஆவணங்களையும் சரிபார்த்து, பாதுகாப்பான முதலீட்டை மேற்கொள்ள வேண்டும் என அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஹென்றி அவர்கள் பொதுமக்களின் நலன் கருதி இந்த விழிப்புணர்வு செய்தியை வெளியிட்டுள்ளார்.

