மோரை ஊராட்சியில்100 % வாக்குப்பதிவுவிழிப்புணர்வு
![]()
மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்ப்பட்ட மோரை ஊராட்சியில் சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் :
திருவள்ளூர் ஏப் 31 : மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்ப்பட்ட மோரை ஊராட்சியில் சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026 யை முன்னிட்டு 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் தலைமையில் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்ப்பட்ட மோரை ஊராட்சியில் புதிய கன்னியம்மன் நகர் பகுதியில் “தேர்தல் திருவிழா-தமிழ்நாட்டின் பெருவிழா” சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026 யை முன்னிட்டு 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாரூ.6 இலட்சம் மதிப்பீட்டில் பொது தேர்தல் விழிப்புணர்வு பசுமை பூங்காவினை திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து 400-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி, வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். பின் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக நடைப்பெற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்நிகழ்ச்சிகளில் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றனர்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும் இணை இயக்குநருமான வை.ஜெயக்குமார், உதவி இயக்குநர் (பயிற்சி) மோகன், உதவி செயற்பொறியாளர் மாரிசெல்வம், வில்லிவாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமகிருஷ்ணன் (கி.ஊ), செல்வசுந்தரி (வ.ஊ) மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

