ஸ்ரீ சீதாராமன்திருக்கல்யாண மஹோற்சவம்
![]()
புலியூர் கண்டிகை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சீதா ராமர் திருக்கோவிலில் ஸ்ரீ சீதாராமன் திருக்கல்யாண மஹோற்சவம் மற்றும் ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு சாய்பாபாவின் ஊஞ்சல் சேவை :
திருவள்ளூர் மார்ச் 30 : திருவள்ளூர் அடுத்த புலியூர் கண்டிகை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சீதா ராமர் திருக்கோவிலில் ஸ்ரீ சீதாராமன் திருக்கல்யாண மஹோற்சவம் மற்றும் ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு சாய்பாபாவின் ஊஞ்சல் சேவை வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழா கடந்த 25 ம் தேதி பந்தக்கால், கோ பூஜையுடன் தொடங்கியது.அதனைத் தொடர்ந்து ஸ்ரீ சீதாராமர் உற்சவமூர்த்தி திருமஞ்சனம், அபிஷேகம் நடைபெற்றது.பின்னர் சீர்வரிசை கொண்டு வருதல், பெண் அழைப்பு, சங்கல்பம் புண்யாஹவாசனம்,மாங்கல்ய பூஜை, மாங்கல்யதாரணம் மாலை மாற்றுதல் பூர்ணாஹீதி, பட்டாபிஷேகம் நடந்தேறின.
மேலும் சாய்பாபா ஆலயத்தில் ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு சாய்பாபாவின் ஊஞ்சல் சேவை மஹோற்சவத்தை முன்னிட்டு காக்கட ஆரத்தி,துணி பூஜை மதியம்,மதியான ஆரத்தி, தூப ஆரத்தி நடைபெற்றது. இதில் ஆலய நிர்வாகிகள் கிராம மக்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியின் அருளை பெற்றனர். இதையடுத்து ஏராளமானவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இரவு ஸ்ரீ சீதாராமர் வீதி உலா புறப்பாடு நடைபெற்றது.

