கோவை கேபிஆர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
![]()
கோவை
கோவை அரசூர் பகுதியில் உள்ள, கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் 2021-2024 ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணாக்கர்களுக்கு மூன்றாவது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. 

கோவை அரசூர் பகுதியில் உள்ள, கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் 2021-2024 ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணாக்கர்களுக்கு மூன்றாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வினைக் கல்லூரியின் செயலர் காயத்ரி அனந்தகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். கே.பி.ஆர் குழுமத்தின் தலைவர் டாக்டர் கே.பி.இராமசாமி கலந்து கொண்டு பட்டம் பெறும் மாணவர்களை வாழ்த்தினார். கல்லூரி முதல்வர் முனைவர் பி.கீதா ஆண்டறிக்கை வாசித்தார். இந்தியத் தொழில் நுட்பக் கழகத்தின் இயக்குநர் முனைவர் வி.காமகோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவ, மாணவியருக்குப் பட்டமளித்துச் சிறப்புரை வழங்கினார். அப்பொழுது அவர் கூறியதாவது..
கல்வியின் மேன்மையினையும்,தகவல் தொழில் நுட்பத்தின் அவசியத்தையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்ததோடு, இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப மாணவர்கள் தங்கள் அறிவினை வளர்த்துக் கொண்டு, தகவல் தொழில்நுட்ப நுணுக்கங்களில் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார். 740 மாணவ, மாணவியர்கள் பட்டம் பெற்று, பட்டமளிப்புவிழா உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் கல்லூரி புல முதன்மையர்கள் முனைவர் குமுதாதேவி, முனைவர் ஜோதி, முனைவர் ஆனந்த் ஜெரால்டு, முனைவர் ரஞ்சிதா குமாரி, முனைவர் பிரதீபா ஆகியோர் பங்கேற்று மாணவர்களை வாழ்த்தினர். மேலும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், பெற்றோர்கள் உட்பட 1500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

