கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில்100 சதவிகித வாக்குவிழிப்புணர்வு
![]()
கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு பகுதியில் சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் :
திருவள்ளூர் மார்ச் 29 : திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்ப்பட்ட ஒதப்பை பகுதியில் செயல்படும் தனியார் தொழிற்சாலையில் “தேர்தல் திருவிழா-தமிழ்நாட்டின் பெருவிழா” சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026 யை முன்னிட்டு 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் தலைமையில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக் கொண்டு, கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்.
பின் வாக்காளர் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை தொழிலாளர்களின் தொழிற்சாலை தலை கவசங்களில் ஒட்டியும், சான்றிதழ்களையும் வழங்கி, செஃல்பி பூத்தில் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றனர்.
அதனைத்தொடர்ந்து, மெய்யூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட தேர்தல் அலுவலர் வாக்குச்சாவடி மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் சீத்தஞ்சேரி பகுதியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மு.பிரதாப் பறக்கும் படை மற்றும் நிலை குழுக்கள் வாகனங்கள் சோதனையிடும் பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டு விவரங்களை கேட்டறிந்தார்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும் இணை இயக்குநருமான வை.ஜெயக்குமார், கும்மிடிப்பூண்டி தேர்தல் நடத்தும் அலுவலரும் தனித்துறை ஆட்சியருமான வெங்கடேஷன், உதவி இயக்குநர் (பயிற்சி) மோகன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் ஊத்துக்கோட்டை வட்டாட்சியருமான ராஜேஷ், தனியார் தொழிற்சாலை பிரிதிகள், பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

