இருசக்கர வாகனத்தில் சென்ற வெல்டர் லாரி மோதி பலி
![]()
திருவள்ளூர் அருகே யமஹா இருசக்கர வாகனத்தில் சென்ற வெல்டர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் பலத்த காயமடைந்த அவரது நண்பர் சிகிச்சை பலனின்றி பலி :
திருவள்ளூர் மார்ச் 27 : திருவள்ளூர் அடுத்த கிளாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வெல்டர்கள் பாலாஜி (27) சஞ்சய் (25) இருவரும் கடந்த 23 ம் தேதி யமஹா எம் டி இருசக்கர வாகனத்தில் தனது ஊரிலிருந்து தண்டலம் நோக்கி வந்துள்ளனர். அப்போது தண்டலம் பகுதியில் உள்ள சாலை வளைவில் கடக்க முயன்ற போது இருசக்கர வாகனம் எதிரே வந்த லாரி மீது மோதியதில் பின்னால் அமர்ந்திருந்த பாலாஜி சம்பவ இடத்திலேயே பலியானர்.
இதில் படுகாயமடைந்த சஞ்சய் மீட்கப்பட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இச்சம்பவம் தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து கர்நாடகா பதிவு எண் கொண்ட லாரியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் படுகாயமடைந்த சஞ்சய் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலியானதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.சாலை வளைவில் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெறும் பகுதியாக மாறி வருவதால் விபத்தை தவிர்க்கும் வகையில் நெடுஞ்சாலைத் துறையினர் எச்சரிக்கை பலகை அல்லது சாலை நேராக அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

