மாவட்ட தேர்தல் அலுவலர் மு.பிரதாப் ஆகியோர் நேரில் ஆய்வு
![]()
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி கல்லூரி மற்றும் பெருமாள்பட்டு தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026யை முன்னிட்டு அமைக்கப்படவுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை ஆவடி மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் மு.பிரதாப் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு அனைத்து ஏற்பாடுகளையும், அடிப்படை வசதிகளையும் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர். இதில் ஆவடி காவல் துணை ஆணையர் பெரோஸ்கான் அப்துல்லா, உதவி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட வருவாய் அலுவலருமான ச.சுரேஷ்,உதவி இயக்குநர் (நிலஅளவை) பேச்சியப்பன்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) டீ.ஸ்ரீராம்,பொதுப்பணி துறை செயற்பொறியாளர் பி.தேவன்,பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள், மற்றும் காவல் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

