திருவள்ளூர் பழைய திரு.வி.க பேருந்து நிலையத்தில்100%வாக்குவிழிப்புணர்வு
![]()
திருவள்ளூர் பழைய திரு.வி.க பேருந்து நிலையத்தில் சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் :
திருவள்ளூர் மார்ச் 27 : திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழைய திரு.வி.க பேருந்து நிலையத்தில் “தேர்தல் திருவிழா-தமிழ்நாட்டின் பெருவிழா” சட்டமன்ற பொது தேர்தல் 2026 யை முன்னிட்டு 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் தலைமையில் நடைபெற்றது.
அதன்படி திருவள்ளூர் பழைய திரு.வி.க பேருந்து நிலையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் தலைமையில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து செஃல்பி பூத்தில் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டு,பொதுமக்களுக்கு உறுதிமொ ழி பத்திரங்களை (சங்கல்ப் பத்திர) வழங்கியும்,பேருந்துகளில் வாக்காளர் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகள் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.அப்பொழுது மாவட்ட ஆட்சியரிடம் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த சிலர் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி மனு அளித்தனர்.அந்த மனுவை படித்த மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார் .
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரும் இணை இயக்குனருமான வை.ஜெயக்குமார், தமிழ்நாடு போக்குவரத்து கழக பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன்,திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் இராமகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன், உதவி இயக்குநர் (பயிற்சி) பி.மோகன், ஓட்டுநர்கள்,நடத்துனர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

