அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில்தேர்தல் திருவிழா
![]()
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேமிப்பு கிடங்கில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் “தேர்தல் திருவிழா-தமிழ்நாட்டின் பெருவிழா” சட்டமன்ற பொது தேர்தல்-2026 முன்னிட்டு 10 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிரித்து அனுப்பப்பட்டது.இதில் உதவி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட வருவாய் அலுவலருமான ச.சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) டீ.ஸ்ரீராம், 10 சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

