பவானி மெயின் ரோட்டில்ஏப்ரல்1புதிய மாட்டு சந்தை

Loading

ஈரோடு மார்ச் 25
ஈரோடு பெரிய அக்ரகாரம் பவானி மெயின் ரோட்டில் புதிய மாட்டு சந்தை தொடங்கப்படுகிறது இந்த மாட்டு சந்தை வருகிற ஏப்ரல் 1 ந் தேதி முதல் செயல் பட உள்ளது.
இந்த மாட்டு சந்தைக்கு தொடக்கத்தில் பல்வேறு இடங்களில் இருந்து சுமார் 1000 க்கும் மேற்பட்ட மாடுகள் வரும் என்றும் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வியாழக்கிழமை ஆகிய 2 நாட்கள் நடக்கும் இந்த மாட்டு சந்தையில்  பிரத்யேகமாக  விவசாயிகள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள் என்று நிர்வாகி சிவகுமார் கூறினார்.
இது பற்றி அவர் மேலும் கூறியதாவது
12 ஏக்கர் பரப்பளவில் இந்த மாட்டு சந்தை நடைபெறுகிறது. மாடுகளை கொண்டு வரும் வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் மாடுகளும் பாதுகாப்பாக தங்குவதற்கும், அவர்கள் கொண்டு வரும் பணத்துக்கும் பாதுகாப்பான இடமாக இந்த இடம் அமைந்துள்ளது. இங்கு கொண்டு வரப்படும் மாடுகளை பரிசோதிக்க கால்நடை டாக்டர்கள் வருகிறார்கள். பள்ளி க்கூடங்கள் வழிபாட்டு தலங்கள் மற்றும் பொது மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமலும் அரசின் விதிகளுக்கு உட்பட்டு ம் இந்த கால்நடை சந்தை நடக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது நாச்சிமுத்து கார்த்திகேயன் செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.
0Shares