திருவள்ளூரில் 100 சதவிகித வாக்குப்பதிவு உறுதிமொழி

Loading

திருவள்ளூரில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக உறுதிமொழி பத்திரங்கள் : மாவட்ட தேர்தல் அலுவலர் மு.பிரதாப் வழங்கி விழிப்புணர்வு :

திருவள்ளூர் மார்ச் 24 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் “தேர்தல் திருவிழா-தமிழ்நாட்டின் பெருவிழா” சட்டமன்ற பொது தேர்தல்-2026 யை முன்னிட்டு 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் தலைமையில் பள்ளி மாணவ மாணவிகள், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களுக்கு உறுதிமொழி பத்திரங்களை (சங்கல்ப் பத்திர)  வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி பேசினார்.தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தல் 23 ஏப்ரல் 2026 அன்று நடைபெற உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில்  100 சதவீதம் வாக்களித்தல் மற்றும் பணம் – பொருள் உள்ளிட்ட எந்தவித தூண்டுதலும் இன்றி வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் SVEEP செயல்பாடுகள் மூலம் பல்வேறு நிகழ்ச்சிகள், ஊரக வளர்ச்சித்துறை, நகர்ப்புற உள்ளாட்சிகள், வருவாய் துறையினர், கல்வி நிறுவனங்களின் மாணவ மாணவியர், மகளிர் சுய உதவிக் குழுவினர்கள் உள்ளிட்ட பல்துறை பங்கேற்பில் நடைபெற்று வருகின்றன.

தேர்தல் விழிப்புணர்வின் மிக முக்கிய அங்கமாக Sankalp Patra உறுதிமொழி பத்திரம்  மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 1,50,000  எண்ணிக்கையில் உள்ள பள்ளி மாணவ மாணவியர் மூலம் அவர்களது பெற்றோர்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, திருவள்ளூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களித்தல் மற்றும் பணம், பொருள் உள்ளிட்ட எவ்வித தூண்டுதலும் இன்றி வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்தினை அடையும் புதுமையான முயற்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இப்பத்திரங்களை பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கு வழங்கி அதனை பள்ளி தலைமையாசிரியர்கள் ஒவ்வொரு மாணவ மாணவியர்களின் பெற்றோர்களிடம் நோக்கத்தினை எடுத்துரைத்து உறுதிமொழி பத்திரத்தில் கையொப்பம் பெற்று மீண்டும் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்களிடம் உறுதிமொழி பத்திரத்தினை திரும்ப வழங்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மு.பிரதாப் கூறினார்.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும் இணை இயக்குநருமான வை.ஜெயக்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள் (ம) தணிக்கை) (திருவள்ளூர் கிழக்கு) சு.பஞ்சு, உதவி இயக்குநர் (பயிற்சி) மோகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) கோ.சுப்பராவ், பள்ளி தலைமையாசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பள்ளிக்கல்வி துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0Shares