மது அருந்த ஓசியில் கிளாஸ் தர மறுத்ததிற்கு வெட்டு

Loading

திருவள்ளூர் அருகே மது அருந்துவதற்கு ஓசியில் கிளாஸ் தர மறுத்த மளிகைக் கடை உரிமையாளரை அரிவாளால் கையில் வெட்டிய  நபர் கைது : போலீஸ் விசாரணை :

திருவள்ளூர் மார்ச் 23 : திருவள்ளூர் அடுத்த  தாமரைப்பாக்கம்  பகுதியைச் சேர்ந்தவர் ரவி இவர் 30 ஆண்டுகள் மேலாக அப்பகுதியில்  மளிகைக் கடை வைத்து  நடத்தி வருகிறார்.  இந்நிலையில் நேற்று மாலை அதே பகுதியைச் சேர்ந்த பல்வேறு வழக்கில் தொடர்புடைய ராசா என்பவர் கஞ்சா போதையில் கடைக்கு வந்துள்ளார்,  அப்போது கடை உரிமையாளர் ரவியிடம்  மது அருந்துவதற்கு  ஓசியில் கிளாஸ் கேட்டுள்ளார்,

அப்போது கடை உரிமையாளர் விளக்கு ஏற்றிவிட்டு தருவதாக கூறியுள்ளார்.  இதனால் ஆத்திரமடைந்த ராசா கடை உரிமையாளரை தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தாக்கியுள்ளார்,  தாக்குதலில் இருந்த தப்பிக்க ரவி தனது இடது கையால் தடுத்துள்ளார், அப்போது அவரது  கை விரல் பலமாக வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து  அருகில் இருந்தவர்கள் கடை உரிமையாளரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர்  இச்சம்பவம் தொடர்பாக  வெங்கல் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராசாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0Shares