பறக்கும்படை&நிலைகுழுக்கள்வாகனங்களைசோதனை

Loading

திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படை மற்றும் நிலை குழுக்கள் வாகனங்களை சோதனையிடும் பணிகள் மற்றும் வாக்குச்சாவடி மையங்கள் : மாவட்ட தேர்தல் அலுவலர் மு.பிரதாப் நேரில் ஆய்வு :
திருவள்ளூர் மார்ச் 22 : சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026 யை முன்னிட்டு, திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எஸ்.ஆர்.எஃப் பேருந்து நிறுத்த பகுதி, எண்ணூர் மற்றும் கத்திவாக்கம் ஆகிய பகுதியில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் பறக்கும் படை மற்றும் நிலை குழுக்கள் வாகனங்களை சோதனையிடும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, வாகன தணிக்கையின் போது பொதுமக்களிடம் கனிவாகவும், மரியாதையுடனும் நடந்துக் கொள்ள வேண்டுமெனவும் அனைத்து வாகனங்களையும் முழுமையாக சோதனை நடத்த வேண்டுமெனவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026 யை முன்னிட்டு, திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணலி அரசு மேல்நிலைப்பள்ளி, வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி மற்றும் எண்ணூர், சகாய மாதா உயர்நிலைப் பள்ளியில்  அமைக்கப்படவுள்ள வாக்குச்சாவடி மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு  உத்தரவிட்டார்.
இதில் திருவொற்றியூர் தேர்தல் நடத்தும் அலுவலரும் உதவி ஆணையர் (ம) மண்டல அலுவலர் டி.பத்மநாபன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் திருவொற்றியூர் வட்டாட்சியருமான கே.திலிப் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0Shares