ஆவணங்கள்இன்றி 4.75லட்சம்ரொக்கப்பணம் பறிமுதல்

Loading

திருவள்ளூரில் வெவ்வேறு இடங்களில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ. 4.75 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைப்பு :
திருவள்ளூர் மார்ச் 22 : தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில்  பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. 50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்பவர்கள் உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் மேல்நல்லாத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த சித்ரா என்பவரை தேர்தல் பறக்கும் படையினர் மடக்கி சோதனை செய்தனர்.
அவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி  ரூ.3 லட்சம் கொண்டு வந்தது தெரிய வந்தது. அடகு வைத்த நகையை மீட்பதற்காக பணத்தைக் கொண்டு சென்றதாக சித்ரா என்ற பெண் கூறிய நிலையில், அந்த அடகு ரசீதில் வேறு ஒருவர் பெயர் இருப்பதால் உரிய ஆவணங்கள் செலுத்தி பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும், உரிய ஆவணங்களின்றி அந்த பணம் கொண்டு வந்ததால் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தனர் . மேலும் உரிய ஆவணங்களை செலுத்தி பணத்தைப் பெற்றுக் கொள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
அதேபோல் திருவள்ளூர் அடுத்த மப்பேடு கூட்டுச்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவள்ளூர் அடுத்த மப்பேடு மேட்டுச்சேரி பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து மப்பேடு நோக்கி சென்று கொண்டிருந்த அருண் என்பவரை தேர்தல் பறக்கும் படையினர் மடக்கி சோதனை செய்தனர்.
அவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி  ரூ.1.75  லட்சம் கொண்டு வந்தது தெரிய வந்தது. அடகு வைத்த நகையை மீட்பதற்காக பணத்தைக் கொண்டு சென்றதாகவும், வங்கி மூடியதால் மீண்டும் பணத்தைக் கொண்டு வந்ததாக அருண் கூறியுள்ளார். ஆனால் உரிய ஆவணங்களின்றி அந்த பணம் கொண்டு வந்ததால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.75 லட்சத்தை கருவூலத்தில் ஒப்படைத்தனர் . மேலும் உரிய ஆவணங்களை செலுத்தி பணத்தைப் பெற்றுக் கொள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
0Shares