5 கிலோ கஞ்சா கடத்தி வந்தநபர் கைது

Loading

ஆந்திர மாநிலத்திலிருந்து 5 கிலோ கஞ்சா கடத்தி வந்த பெங்களூர் பகுதியைச் சேர்ந்த நபர் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் கைது : கஞ்சா பறிமுதல் :

திருவள்ளூர் மார்ச் 20 : ஆந்திர மாநிலத்தில் இருந்து ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.  திருவள்ளூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு   போலீசார் ஆந்திராவில் இருந்து திருவள்ளூருக்கு வந்த  வந்த ரெயிலில் பயணிகளை கண்காணித்தனர்.  அப்போது சந்தேகப்படும்படியாக உட்கார்ந்து கொண்டிருந்த ஒருவரை பிடித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் அவர் கர்நாடகா மாநிலம், பெங்களூர் கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த நிதின் கணேஷ் (32) என்று தெரியவந்தது. மேலும் அவரைப் பரிசோதனை செய்தபோது அவரிடம் 5 கிலோ கஞ்சா இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.  தனையடுத்து திருவள்ளூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார்   நிதின் கணேஷை கைது செய்து அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
0Shares