பறிமுதல் செய்த ரொக்கம், பொருள்கள் ஆவணத்துடன் மேல்முறையீடு

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் பறிமுதல் செய்த ரொக்கம், பொருள்கள் ஆவணத்துடன் மேல்முறையீடு செய்து திரும்ப பெற மாவட்ட குறை தீர் குழு அமைப்பு : மாவட்ட தேர்தல் அலுவலர் மு.பிரதாப் தகவல் :
திருவள்ளூர் மார்ச் 20 : பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருள்களுக்குரிய ஆவணங்களுடன் மேல்முறையீடு செய்து திரும்ப பெறுவதற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஏதுவாக மாவட்ட குறைதீர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தல்-2026, திருவள்ளூர் தேர்தல் மாவட்டத்திற்குட்பட்ட கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம் மற்றும் திருவொற்றியூர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் கால அட்டவணை கடந்த 15 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் தேர்தல் களத்தில் போட்டியிடும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சமமான சூழலை உருவாக்கி தர வேண்டும். அந்த நோக்கத்தில் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்கள் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டு வருகிறது.மேற்படி குழுக்கள் கண்காணிப்பு பணியின் போது, பொதுமக்கள், அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் மற்றும் வியாபாரிகள் பணம் மற்றும் பொருள்கள் எடுத்துச் செல்லும் போது அவை எப்படி பெறப்பட்டது. மேலும் எதற்காக எடுத்து செல்லப்படுகிறது என்பதற்க்கான உரிய ஆவணங்கள் சமர்ப்பித்தால், அத்தொகை வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக எடுத்துச் செல்லப்படும் தொகை இல்லை என்று தணிக்கை அதிகாரிகளால் முடிவு செய்யப்பட்டு, பறிமுதல் செய்யப்பட மாட்டாது.

மேலும் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50,000 க்கும் மேல் எடுத்துச் செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படும். மேற்படி ஆவணங்கள் இல்லாமல் பறிமுதல் செய்யப்படும் பணம் மற்றும் பொருள்கள் சம்பந்தப்பட்ட கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும். சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் பறிமுதல் செய்த பணம் மற்றும் பொருள்களுக்குரிய ஆவணங்களுடன் மேல்முறையீடு செய்து திரும்ப பெறுவதற்கு ஏதுவாக மாவட்ட குறைதீர் குழு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் -7373704202, நேர்முக உதவியாளர் லட்சுமி (கணக்குகள்)} 9443965474, மாவட்ட கருவூல அலுவலர் இ.மோகன்ராஜ் -8495887487 ஆகியோர் கொண்ட குழு விசாரணையில், சம்பந்தப்பட்ட நபர் உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால், அதை சரிபார்த்து சரியாக இருந்தால் பறிமுதல் செய்த பணம் மற்றும் பொருள்கள் விடுவிக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
0Shares