ஆவணங்கள் இன்றி 34 சவரன் நகை, ரூ.3.20 Lபறிமுதல்

Loading

திருவள்ளூர் அருகே வெவ்வேறு இடங்களில் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற 34 சவரன் நகை, ரூ.3.20 லட்சம் பறிமுதல் :

திருவள்ளூர் மார்ச் 20 : திருவள்ளூர் அருகே வெவ்வேறு 2 இடங்களில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஒரே நாளில் 34 சவரன் நகை, ரூ.7.20 லட்சம் ரொக்கம் ஆகியவைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்.23 ஆம் தேதி நடைபெற உள்ளதாக கடந்த 15 ஆம் தேதி தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கும் வந்தது. அதனால் இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி பணப்புழக்கம் மற்றும் பரிசு பொருள்கள் ஆகியவைகள் கொண்டு செல்வதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தீவிர வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்பவர்கள் கட்டாயம் உரிய ஆவணங்களை வைத்திருக்கவும் என இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் திருவள்ளூர் அருகே மூன்று சாலை பிரியும் இடமான பட்டரைபெரும்புதூர் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில்  ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து வந்த வாகனத்தை நிறுத்தி பரிசோதனை செய்தனர். அப்போது, அந்த வாகனத்தில் 34 சவரன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கமும் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து நகை மற்றும் ரொக்கத்தையும் பறிமுதல் செய்து விசாரணை செய்த போது பழைய நகைகளை விற்பனை செய்து புதிய நகைகள் வாங்குவதற்காக சென்னைக்கு சென்றதாக சகோதரிகள் லலிதா, புஷ்பலதா ஆகியோர் தெரிவித்தனர்.

ஆந்திராவில் தேர்தல் நடைபெறாததாலும் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதை அறியாத ஆந்திராவை சேர்ந்தவர்கள் வழக்கம் போல் சென்று வருவதால் ஆந்திர}தமிழக மாநில எல்லையோரப் பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது. இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் நகை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து உரிய ஆவணங்களை செலுத்தி நகை, பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

திருவள்ளூர் அருகே மணவாளநகரில் வாகனச் சோதனையில் புதன்கிழமை காலையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை மடக்கி பரிசோதனை செய்தனர். அப்போது, அவரிடம் ரூ.1.20 லட்சம் வைத்திருந்தது தெரியவந்தது. அப்போது, அவரிடம் விசாரணை செய்ததில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீரப்பன் மகன் சுகுமாரன் என்பதும், வேலைக்காக இங்கு வந்து தங்கியுள்ளார். மேலும், திருவள்ளூர் அருகே தொடுகாடு பகுதியில் தனியார் தொழிற்சாலையில் இருந்து தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை கொடுப்பதற்காக எடுத்துச் சென்றதாகவும் அவர் தெரிவித்தார். அதற்கான ஆவணங்களை காண்பித்து வாங்கிச் செல்லுமாறு கூறி, ரொக்கம் கருவூலத்தில் செலுத்தவும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.
0Shares