தேர்தல் – 2026 மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி
![]()
நசரத்பேட்டை தனியார் பொறியியல் கல்லூரியில் சட்டமன்ற பொது தேர்தல் – 2026 யை முன்னிட்டு மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் :
திருவள்ளூர் மார்ச் 18 : திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி வட்டம் நசரத்பேட்டை தனியார் பொறியியல் கல்லூரியில் சட்டமன்ற பொது தேர்தல் – 2026 யை முன்னிட்டு மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் பங்கேற்று முழுமையாக பயிற்சி பெற வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தியதை தொடர்ந்து, பூவிருந்தவல்லி,திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் பறக்கும் படை மற்றும் நிலை குழுக்கள் வாகனங்களை சோதனையிடும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்ற பொது தேர்தல் – 2026 யை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் தலைமையில் வங்கியாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் பூவிருந்தவல்லி தேர்தல் நடத்தும் அலுவலரும் உதவி ஆணையருமான (கலால்) கணேசன், பூவிருந்தவல்லி வட்டாட்சியரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான உதயம், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ப.ஜெயஸ்ரீ மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

